பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

25

அரிசியும் கோதுமை மாவும் வேண்டிய அளவு தருவிக்க முடிகிறது.

இந்தச் சுபிட்சமான நிலைமைக்கு ஆதிகாரணமானவர்களும், இன்றுவரை காரணமாயிருப்பவர்களும் ஏழரை லட்சம் இந்தியத் தொழிலாளர்கள்தான்.

இலங்கையில் முன் தலைமுறைகளில் வேலை செய்யப் போனவர்களும் அவர்களுடைய சந்ததிகளுமாக இன்று ஏழரை லட்சம் தமிழ் நாட்டுத் தொழிலாளிகள் இலங்கையில் இருக்கிறார்கள். இவர்களைப் பின் தொடர்ந்து சென்று வியாபாரம் முதலிய தொழில்களில் ஈடுபட்ட வர்கள் ஒரு லட்சம் பேர் இருக்கிறார்கள்.

இந்த ஏழரை லட்சம் இந்தியர்களை — பெரும்பாலும் தமிழர்களை — அங்கிருந்து கிளப்பிவிட இலங்கை சர்க்காரின் மந்திரிகள் பலவித உபாயங்களைக் கையாண்டு வருகிறார்கள். பற்பல சூழ்ச்சித் திட்டங்கள் வகுக்கிறார்கள்.

முக்கியமாக இந்தியர்களுடைய பிரஜா உரிமையையும் வோட்டுரிமையையும் பறித்துவிடக் கூடிய சட்டங்களைச் செய்திருக்கிறார்கள்.

இத்தனை வருஷங்கள் இலங்கையில் தொடர்ந்து வசித்தவர்களுக்கு மட்டுமே இலங்கைப் பிரஜா உரிமை உண்டு என்றும், அதற்கு அவர்கள் அத்தாட்சி காட்டி ருசுப் படுத்த வேண்டும் என்றும் விதித்திருக்கிறார்கள்.

இந்தக் கடுமையான சட்டத்தின்படியும் இலங்கையின் பிரஜா உரிமை பெறக்கூடிய இந்தியர்கள் லட்சக்கணக்கானவர்கள் உண்டு. ஆனால் அதற்குரிய தஸ்தவேஜுகளைத் தேடிக் கண்டுபிடித்துக்கொண்டு வந்து கொடுத்துப் பதிவு செய்து கொள்வதென்பது பெரும்-