பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

27

ஏழரை லட்சம் இந்தியத் தொழிலாளிகள் பிறப்புரிமை, வோட்டுரிமை உள்பட எல்லா உரிமைகளையும் இழந்து அடியோடு சர்வ நாசம் அடையாமல் தடுத்துக் கொண்டு நிற்பவர்கள் இந்த ஒரு சில இந்தியத் தலைவர்கள் தான்.

சில நாளைக்கு முன்பு இலங்கை மந்திரிகளில் ஒருவரான ஸ்ரீ குணசிங்கா என்பவர் இந்தத் தலைவர்களைப் பற்றிப் பேசியது பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது.

“இந்தியத் தொழிலாளிகளே! ராஜலிங்கத்தையும், தொண்டைமானையும், சுப்பையாவையும் நம்பாதீர்கள். அவர்களை நம்பினால் அழிந்து போவீர்கள். அவர்களுடைய திட்டம் எதுவும் உருப்படாது!” என்று ஸ்ரீ குணசிங்கா எச்சரித்திருக்கிறார்.

ஒரு ராஜலிங்கமும், ஒரு தொண்டைமானும், ஒரு சுப்பையாவும் இல்லாமற் போயிருந்தால் இலங்கையின் சகல வளங்களுக்கும் காரணமான ஏழரை லட்சம் தமிழர்களை இலங்கை சர்க்கார் ஓட்டைக் கப்பலில் ஏற்றிக் கடலிலே விட்டிருப்பார்கள்.

ஸ்ரீ ராஜலிங்கத்துக்கும் ஸ்ரீ தொண்டைமானுக்கும் ஸ்ரீ சுப்பையாவுக்கும் மற்றும் அவர்களுடைய சகாக்களுக்கும் ஏழரை லட்சம் தோட்டத் தொழிலாளர் மட்டுமின்றித் தமிழ்நாடே மிகவும் கடமைப் பட்டிருக்கிறது.


3

மிழ் மணங் கமழ வேண்டும்” என்று மணிரங்கு ராகத்தில் கீர்த்தனம் பாடுகிறார்களே, உண்மையில் தமிழுக்கு என்று ஒரு தனி மணம் உண்டா என்று கேட்டால், கட்டாயம் உண்டு என்று நான் தயங்காது