பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

இலங்கையில் ஒரு வாரம்

வசிக்க அந்த நிலத்தில் ஓர் இல்லம் அமைக்க வேண்டும். கொழும்புத் தமிழ்க் சங்கத்துக்கு ஒரு சொந்தக் கட்டடம் மட்டும் ஏற்பட்டு விடட்டும்; அப்புறம் “தமிழை இலங்கையிலிருந்து விரட்டுவேன்” என்று எவன் துணிந்து சொல்ல முன் வருவான்? பார்க்கலாம் ஒரு கை!

காரியதரிசி கனகசுந்தரம் அவர்களின் மனோரதம் நிறைவேறுவது அப்படியொன்றும் பிரமாதமான காரியமன்று. விரைவிலேயே அது நிறைவேறிவிடும் என்று நம்புகிறேன். தமிழ்ச் சங்க விழாவில் கூடியிருந்த ஆயிரக் கணக்கான தமிழர்களின் மலர்ந்த முகங்கள் எனக்கு அந்த நம்பிக்கையை அளித்தன. வித்வான் கனகசுந்தரம் இனிய தமிழ்ப் பண்புக்குரிய முறையில் அவர்களுடைய ஒத்துழைப்பைக் கோரிப் பெற்றுத் தமிழ்ச்சங்கக் கட்டிடத்தை நிறுவுவார் என்று நம்புகிறேன்.

தமிழ்ச் சங்க விழாவில் கூடியிருந்தவர்களைப் பற்றிச் சில வார்த்தைகள் இங்கே கூறியே தீரவேண்டும். தமிழகத்தில் சென்ற ஏழெட்டு ஆண்டுகளாகப் பல தமிழ் விழாக்கள், கவிஞர் விழாக்கள், நடந்திருக்கின்றன. “அந்த விழாக்களில் பலவற்றுக்கும் நான் சென்றிருக் கிறேன். ஆனால் இந்தக் சபையைப் போலப் பார்த்ததில்லை” என்று கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் சொன்னேன். அதையே தான் இங்கேயும் சொல்கிறேன். அங்கே ஒன்றும் இங்கே வேறொன்றும் சொல்லும் வழக்கம் என்னிடம் கிடையாது. தமிழ் நாட்டில் நடக்கும் தமிழ் விழாக்களில் வெள்ளை வெளேரென்ற ஆடை அணிந்து மலர்ந்த முகங்களுடன் சொற்பொழிவுகளை ரஸித்து அநுபவித்துக் கொண்டிருப்போர் கூட்டத்தைச் சபையில் ஒரு பகுதியில் பார்க்கலாம். அவர்கள் செட்டி நாட்டிலிருந்து வந்த தமிழன்பர்களாயிருப்பார்கள். ஸ்ரீ-