பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

33

சா. கணேசன் அவர்களுடைய சட்டையணியாத கரிய திருமேனி மற்றவர்களின் ஆடை வெளுப்பை நன்கு எடுத்துக் காட்டும். கொழும்பில் தமிழ்ச் சங்க விழாவில் கூடியிருந்த கூட்டம் முழுதுமே அப்படியிருந்தது. எல்லாரும் தூய வெள்ளை உடை தரித்தவர்கள். (பெரும் பாலோர் அடையாறு பாணியில் சட்டை அங்கவஸ்திரம் அணிந்தவர்கள்.) அவ்வளவு பேரும் மலர்ந்த முகத்தினர். சொற்பொழிவாளர் கூறும் ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்து உணர்ந்து அனுபவித்து ஆனந்தப் படுகிறவர்கள். ஒவ்வொரு சமயம் எனக்குத் தோன்றியது, மேடையில் ஏறிச் சொற்பொழிவு ஆற்றுகிறவர்களைக் காட்டிலும் சபையில் அமர்ந்திருப்பவர்கள் அதிகம் படித்து அறிந்தவர்கள் என்று. தமிழனுக்குரிய உயர்ந்த பண்பாட்டின் காரணமாகவும் தமிழன்பு காரணமாகவுமே அவர்கள் அவ்வளவு உற்சாகத்துடன் சொற்பொழிவுகளை ரஸித்து மகிழ்கிறார்கள் என்றும் கருதினேன்.

ஆண் மக்கள் மட்டும் அல்ல; பெண் மணிகள் பகுதியிலும் அப்படியேதான். யாழ்ப்பாணத் தமிழர் குடும்பங்களில் படித்த பெண்மணிகள் அதிகம். இலங்கையின் முன்னேற்றத்துக்குப் பல துறையிலும் காரண புருஷரான ஸர் பொன்னம்பலம் ராமநாதன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் பெண்கள் கலாசாலை யொன்று நிறுவினார். அதில் படித்த பெண்மணிகள் பலர் இப்போது கொழும்பில் பெரிய குடும்பங்களில் எஜமானிகளாயிருக்கிறார்கள். அவர்கள் “சைவ மங்கையர் கழகம்” என்னும் ஸ்தாபனத்தை நிறுவி நன்கு நடத்தி வருகிறார்கள். அவர்களுடைய கழக மண்டபத்திலேதான் தமிழ்ச் சங்க விழா நடந்தது. இதிலிருந்து தமிழ் விழாவுக்கு வந்திருந்த