பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

57

னும் சிலர் “கடவுளைத் தொலைத்து விடுவோம்!” என்றும் பயமுறுத்தி வருகிறார்கள் அல்லவா? அப்படியே இவர்களுடைய கட்சி பிரமாதமான வலிமை பெற்று வெற்றியடைந்தாலும், நம்முடைய தமிழும் தமிழரின் கடவுளும் கட்டாயம் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். தமிழையும் தமிழரின் சமயத்தையும் தமிழ்நாட்டிலுள்ளவர்கள் கைவிட்டாலும்கூட இலங்கையிலுள்ள தமிழர்கள் போற்றிக் காப்பாற்றி வருவார்கள். இதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இத்தகைய உறுதி பெற்றுக்கொண்டு கொழும்பு நண்பர்களிடம் விடையும் பெற்றுக்கொண்டு, ஸ்ரீ தூரனும் நானும் யாழ்ப்பாணத்துக்குக் கிளம்பினோம்.


5

யாழ்ப்பாணத்தில் இடறி விழுந்தால் ....... இது என்ன? இடறி விழுவதற்கு யாழ்ப்பாணத்துக்குப் போகவேண்டுமா? உள்ளூரிலேயே இடறி விழக் கூடாதா ?.... விழலாம், ஐயா, விழலாம்! உள்ளூரிலே நன்றாக இடறி விழலாம். ஆனால் உள்ளூரிலே இடறி விழுந்தால் எங்கேயாவது நடுச்சாலையில் விழுந்து தொலைப்போம். அல்லது ஒரு டிராம் வண்டி அல்லது மோட்டார் வண்டி அல்லது ஒரு ரயில் வண்டி மீது விழுந்து தொலைப்போம். வண்டிகள் வீணில் சேதம் அடையும்; போக்குவரத்து தடைப்படும்.

ஆனால் யாழ்ப்பாணத்தில் இடறி விழுந்தால் ஒரு உபாத்தியாயர் அல்லது ஒரு கல்விமான் மீது தான் விழுவோம். அப்படி விழுவதினால் அவர்களுக்குச் சேதம் ஏதேனும் ஏற்பட்டால் யாரும் அதைப் பற்றிக்