பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

இலங்கையில் ஒரு வாரம்

மெள்ள மெள்ளத் தொட்டுவிட்டுத் திரும்பிவிடுகின்றன. சோழ நாட்டில் உள்ள கோடிக்கரைக்கும் யாழ்ப்பாணக் கடற்கரைக்கும் ஏறக்குறைய முப்பது மைல் தாரந்தான். கோடிக்கரையில் காலையில் படகில் ஏறினால் மாலையில் இங்கு வந்து விடலாம். முன்னாளில் பராந்தகன், இராஜராஜன், இராஜேந்திரன் முதலிய சோழ மன்னர்கள் தங்கள் மாபெரும் படைகளுடன் இந்தத் துறையிலே வந்து இறங்கியிருக்கலாம். நாவாய்கள், கப்பல்கள், தோணிகள், படகுகள், ஓடங்கள், கட்டுமரங்கள் ஆயிரக் கணக்கில் சேகரித்துப் படைகளை ஏற்றி வந்திருக்க வேண்டும். ஆனால் நாடு பிடிக்கும் ஆசையுடன் மட்டும் அவர்கள் வரவில்லை. ஈழநாட்டு அரசகுலத்தினரில் சண்டை மூண்டு, யாராவது உதவிக்கு அழைத்தபோதுதான் வந்தார்கள். வந்த இடத்தில் நல்ல அரசாட்சியை நிலை நாட்டி ஆண்டார்கள்.

அது ஒரு காலம். இப்போது என்ன நடக்கிறது தெரியுமா? கோடிக்கரைப் பக்கங்களிலிருந்து பிழைப்புக்குக் கஷ்டப்படுகிறவர்கள் கள்ளப்படகுகளில் ஏறித் திருட்டுத்தனமாக வந்து இந்தக் கரைகளில் இறங்குகிறார்களாம். இவர்கள் சிலராயிருந்தாலும் இதைப்பற்றிச் சிங்கள மந்திரிகள் பிரமாதப்படுத்துகிறார்கள்.

சில வருஷங்களுக்கு முன்னால், இந்தியாவில் அரிசிக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்த பிறகு, இலங்கையில் உணவு நிலைமை நெருக்கடியடைந்திருந்தபோது, கோடிக்கரைப் பகுதியிலிருந்து கள்ளப் படகுகளில் இலங்கைக்கு அரிசி போய்க்கொண்டிருந்தது. கள்ளப் படகுக்காரர்கள் நல்ல விலை பெற்று லாபமடைந்து வந்தார்கள். இப்போதோ இலங்கையின் உணவு நிலைமை திருப்திகரமாகிவிட்டதால் அங்கே தஞ்சை ஜில்லா அரிசிக்குக்