பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

இலங்கை எதிரொலி



நடக்கும் வார இதழான "சுதந்திரன் பத்திரிக்கையின் ஆசிரியர் சிவநாயகம் அவர்களால் போற்றப்பட்ட கூட்டம் இது. மண்டபம் வழிந்து வெளிவராண்டாவிலும், புல்தரையிலேயும் ஆயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்தனர். இந்த கூட்டத்தையும், ஊர்வலத்தையும் பார்த்து திகைத்துப்போன ஒரு தினசரி, இதுவரை நமது கழகச் செய்திகளை இருட்டடிப் புச் செய்திருந்தது இன்று முதல் செய்திகளை ஒழுங்காகப் போடத் தொடங்கியது ஒன்றே ஊரில் பரபரப்பை உண்டாக்கி விட்டது. பத்திரிக்கையை பார்த்து வியப்படையும் அளவுக்கு நமது கழகத்தின் செல்வாக்கு இலங்கையில் வளர்ந்திருக்கிறதா என்ற நிலையை பொதுமக்கள் அடைந்த பிறகு அனைவருடைய கண்ணோட்டமும் நமது கூட்டங்களின்மேல் விழத் தொடங்கியது என்றால் மிகையாகாது.)

தலைவர் அவர்களே ! தாய்மார்களே! தோழர்களே ! வணக்கம். இந்தியாவில் இருந்துவந்தவர்கள் என்ன சொல்லப்போகின்றார்கள் என்பதையறிய அதிக ஆவலோடு, மலர்ச்சி கொண்ட முகத்தோடு வீற்றிக்கின்றீர்கள். சுமார் நான்கு மைல்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்ட உங்களில் யாருக்கும் சலிப்புத்தட்டியதாகத் தெரியவில்லே. பல இன்னல்களுக்கு இடையே எதிரியை வீழ்த்திய வீரன் துண்டிக்கப்பட்ட தன் காலேயும், சேதம டைந்த தன் கையையும், குருதி கொட்டிக் கொண்டிருக் கும் தன் உடலையும் பார்த்து கவலைப்படுவதில்லை. எதிரியை வீழ்த்திய ஒன்றை நினைத்தே அவன் களிப்பு கொள்கின்றான். தோள்கள் விம்மி மனம் பூரிக்கின்றான். தன் எதிரில் குவிக்கப்பட்டிருக்கும் பிணங்களைக் கண்டு அவன் கண்கலங்குவதில்லை. ஆனந்தக் கண்ணிர் சொரிகின்றான். இரத்தந் தோய்ந்த வாலை முத்தமிடுகின்றான். நொண்டிக், கொண்டு சென்றாகிலும் தன் வெற்றியை தளகர்த்தனுக்குச் சொல்கின்றான். அதேபோல் ஊர்வலம் வந்துகொண்