பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

இலங்கை எதிரொலி


தனுப்பு, நட்புவேண்டுமானால் நீதியைப்பற்றி நினைக்காதே,' இதுதான் கிரேக்க ஞானி சாக்ரடீஸ் உலகுக்கு அளித்த சிறந்த தத்துவம். சாக்ரடீஸ் சொன்னான் என்பதற்காக மட்டிலுமல்ல, இன்றளவும் அந்த வார்த்தைகள் நாட்டின் நடைமுறையிலே இருக்கின்றன. ஆகையாலேதான் தோழர் ஜீவாவின் கட்டுரைக்கு பதில் அளிக்கவேண்டும் என்று நினைத்து பேனாவை கையில் எடுத்தபோது நட்பை மறந்துவிட்டோம். அதுதான் நீதியும்கூட. மேலும் தர்க்கம் தி. மு. க. யாராரிடம் புரிந்திருக்கிறது என்பதையும் தோழர்கள் சிந்திக்கவேண்டும். கவியிற் பெரியவனும் தமிழ்கம்பன் என்று வைதீக உலகத்தால் போற்றப்பட்ட இராமன் முன்னோடியான கம்பனை நீதி மன்றத்தில் தலை குனியவைத்து நீதிமானை மயக்கமுறச்செய்தவர்கள் பரம்பரையார்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தார் என்பதை கம்யூனிஸ்டு தோழர்கள் மறந்துவிடக்கூடாது.

ஆனால், கம்யூனிஸ்டு தோழர்களைப்பற்றி இவ்வளவு பேர்கள் சொன்ன தவறான கருத்துக்களுக்கு நான் அப்பாற்பட்டவன் என்பதுதான் உண்மை. ஏனெனில், உலகச் சொத்துக்களையே பொது உடமையாக்கவேண்டுமென்று ஓயாதுழைக்கும் கம்யூனிஸ்டு நண்பர்கள் தங்களுக்குச் சொந்தமான இந்த மண்டபத்தை சிறிதுநேரம் தன் தோழமைக் கழகத்துக்கு இந்த இடத்தை அளிக்காவிட்டால், கம்யூனிஸ்டு கொள்கையிலேயே மக்களுக்கு அவநம்பிக்கை வந்துவிட்டால்என்னசெய்வது என்ற பரந்த நோக்கத்தால்தான் இதையளிக்க பல உண்மையான கம்யூனிஸ்டு தோழர்கள் இங்கே இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. அந்த நல்ல மனமும் பொது நோக்கமும்கொண்ட உண்மையான பொது உடமைத் தோழர்களுக்கு என் நன்றி.