பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.பி.சிற்றரசு

35


நிராகரிக்கப்படும்போது ஆட்சியை மாற்றியமைக்க அல்லது அந்த கொடுங்கோலாட்சியிலிருந்து விலக, தங்களுக்குத் தேவையான ஆட்சியையமைத்துக்கொள்ள உரிமையுண்டு என்பதை யாரும் மறுப்பதற்கில்லை மறுக்க முடியாமல் சட்டங்கள் தடுக்கலாம், ஆனால் அவ்வித சட்டங்களைச் செய்தவர்களும் மனிதர்கள்தாம்.

தன் முன்னோரால், அல்லது தன்னாலேயேதான் வாழ்வதற்காக கட்டப்பட்ட கட்டடத்தை, கட்டியவனே இடித்து வேறோர் கட்டிடத்தை புதுப்பிக்கக் கூடாதென்று மறுப்பது கயமைத்தனம். சட்டங்களை ஒப்புக்கொண்ட பின் எதிர்ப்பதுகூடாது என்று ஆங்காங்கே பேசப்படுகிறது. சட்டங்கள் படிக்கும்போது நன்றாக இருந்து அவை நடைமுறைக்கு வரும்போது கொடுமையாயிருந்தால் மாற்றாமல் என்ன செய்யமுடியும். எதிர்ப்பாராதவிதமாக நமக்கு பல நண்பர்கள் தோன்றுகிறார்கள். அவர்களில் யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்று தெரிந்துக் கொள்ள சில நாட்களாய்விடுகின்றன. தெரிந்துக் கொண்டபின் தீய நண்பர்களை ஒதுக்குவோமானால், முதலில் என்னிடம் நட்புகொண்டு, பிறகு ஏன் நிராகரிக்கிறாய் என்றா அவன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரமுடியும். விளையும் என்ற நம்பிக்கையால் விதைவிதைக்கிருேம்: விளையயவில்லை. அதற்காக நிலத்தின்மீதோ அல்லது மழை பெய்யாத காரணத்தால் வானத்தின்மீதோ மான நஷ்டவழக்குத் தொடரமுடியுமா. அதே போலத்தான். சட்டங்கள் அனைவரையும் சமமாக நடத்தும் என்று முதலில் எதிர்ப்பார்க்கிறோம். பிறகு அவைகள் ஓரவஞ்சனையாக நடக்குமானால் அதன் எல்லையைவிட்டு வெளியே வருவது தவிர வேறு வழியில்லை. அந்த அடிப்படையில் ஏற்பட்டதுதான் திராவிட முன்னேற்றக கழகத்தின் திராவிடநாட்டுப் பிரிவினை. இது இந்தியா சுதந்திரம்