உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

பட்டுக் கைக்குட்டையினால், தலையைத் துடைத்துக் கொண்டான்; உயர்ந்திருந்த காலருடன் கூடிய இராணுவ உடுப்பின் உட்பகுதியைச் சுற்றி இழுத்து விட்டுக் கொண்டான். டெங்-பிங் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். காலையில் மணி 7-25. வழக்கமாக ரேடியோவில் பேசும் பதினைந்து நிமிஷங்களை விட, அதிகமாகவே அவன் பேசி விட்டான். பேசிய விஷயம் மிகவும் முக்கியமானதாகும்!

செப்டம்பர் மாதத்தின் கடைசிப் பகுதி. பகல் பொழுது குளிர்ப் பதமாகவும், துன்புறுத்துவதாகவும் இருந்தது. டெங்-பிங் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான். ஜன்னலுக்கு முன்னால், வடபுறமாக நின்று கொண்டிருக்கச் சென்றான். தூய காற்றை அனுபவித்தான்.

இனி மேல், அவன் தன்னுடைய மேலதிகாரியான ஸெங்-கேயிடம் எல்லாவற்றையும் அறிவித்தாக வேண்டும்.

ஸெங்-கே, மாகாணக் கமிஷனர்; நகரத்தின் ‘கம்யூன்’ அமைப்பைப் பார்வையிட்டுப் பரிசோதிக்க கான்டனிலிருந்து அனுப்பப்பட்டவன். சம்பந்தப்பட்ட வேலை பூராவும், தன் தலை மீது விழுமென்று டெங்-பிங்குக்குத் தெரியும். தன்னுடைய கடமையை வெற்றிகரமாகச் செய்து முடித்து, தன் மேலதிகாரியிடம் தனக்கு உள்ள தொடர்பை திருப்திகரமான முறையில் பேணிக் கொள்ள வேண்டுமென்பதே முக்கியம். ‘கட்சி’யில் அவனுக்கு உரிய நிலைப்பின் தன்மை, அவனது செயல் திறனைப் பொறுத்தே இருந்தது. தன் கடமையைச் சிறப்பாகச் செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/15&oldid=1638682" இலிருந்து மீள்விக்கப்பட்டது