பக்கம்:இலட்சிய பூமி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

16

விட முடியுமென்று அவன் அறிந்தாலும், தன் உயர் அதிகாரியின் சக்தியும், தனக்கு இருந்த பொறுப்பின் சிக்கலான நிலையும் அவனைப் பயமுறுத்தின. ஈஸ்ட் ஆறு கீழே பாய்ந்தோடிக்கொண்டிருந்தது. ஆற்றுக்குக் குறுக்கே-போக்லோ மலையுச்சிகளுக்கு மேலே வடமேற்கில் புயல் மேகங்கள் திரண்டு கொண்டிருந்ததை அவன் பார்த்தான். போக்லோவில் முன்பு அரிசிக் கலகமொன்று நடந்தது. அதில் இரண்டு படைவீரர்கள் கொல்லப்பட்டதைப் பற்றியும் அவன் தீவிரமாகச் சிந்திக்கலானான். அவன் பின்புறம் திரும்பி, கண்ணாடிப் பெட்டியில் இருந்த துப்பாக்கியைப் பார்த்தான். முந்தின நாளில் புதிதாக வந்து சேர்ந்த ஜேம்ஸ் தாயெர் என்னும் ஆங்கிலேயனிடமிருந்து அவன் அத் துப்பாக்கியைக் கைப்பற்றினான். அந்த ஆங்கிலேயனை கண்ட பின் தனக்கு ஏன் இவ்வளவு கலக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. உல்லாச யாத்ரீகனாக வந்த அந்த ஆங்கிலேயன் ஒரு துப்பாக்கியையும் தூக்கிக்கொண்டு வரத் துணிவதென்றால், அதற்கு அர்த்தம் என்ன? அது என்ன துடுக்குத்தனம்? இந்தக் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ளக்கூடுமென்று அவன் எப்படி எதிர்பார்த்தான்? அவனது பயணம் சம்பந்தப்பட்ட சான்றுத் தாள்களெல்லாம் கச்சிதமாகவே இருந்தன. அவனுடைய அத்தையான சகோதரி ஆங்கெலிகாவைச் சந்திக்க வந்திருந்தான். செஞ்சீனாவிலிருந்து வெளியேற்றப்படவிருந்த கடைசி மதச் சேவகி அந்த அம்மணி. அந்த ஆங்கிலேயன் இன்னும் சில தினங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/16&oldid=1405518" இலிருந்து மீள்விக்கப்பட்டது