பக்கம்:இலட்சிய பூமி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

17

களுக்குள் மதச் சேவகியான தன் அத்தையுடன் புறப்படவேண்டும், ஆதலால், அவனை ஜெயிலில் பிடித்து அடைப்பதன் மூலம் ஒரு அரசியல் தகராறு உருவாவதை அவன் விரும்பவில்லை பெட்டியைத் திறந்தான்; ஏதோ அழகான பொருள் என்று எண்ணி, துப்பாக்கியைப் பார்த்துவிட்டு, அதை அப்படியும் இப்படியுமாகப் புரட்டினான். பிறகு அதைப் பத்திரமாக வைத்தான். சாய்வு மேஜையில் அமர்ந்து, கைக்கடிகாரத்தைப் பார்த்தான் அவன். மணி 7-35தான். செங்கிடம் அறிவிப்பதற்கு இன்னமும் பத்து நிமிஷங்கள் இருந்தன. ஒலிபரப்புப் பேச்சைக் குறித்து மேலதிகாரி என்ன அபிப்பிராயம் கொண்டிருக்கிறார் என்றறிய அவன் ஆவல் கொண்டான். ஆனாலும் தான் மிகவும் அமைதியுடன் இருக்க வேண்டுமென்பதை அறிந்திருந்தான் டெங்-பிக். அவன் அறையில் அவன் மட்டும்தான் இருந்தான். தனக்குத்தானே தயார் செய்து கொண்டான். வெளி அறையில் அவனுடைய இரண்டு காரியதரிசிகளும் இருந்தனர். அவர் களுக்கு வியூ, மோய் எனப் பெயர். அவர்கள் இருந்த வெளி அறையைக் கடந்துதான் பார்வையாளர்கள் செல்ல வேண்டும். ஒழுங்கை நிலைநாட்டும் தீவிரவாதியாக டெங் பிங் இருந்து வந்தான்; பெரிய கம்யூனிஸ புரட்சியின் கடுஞ் சோதனையில் தன்னை வலுப்படுத்திக் கொண்டவன் அவன். அந்தப் பெரிய நகரத்தின் முக்கியமான பதவியாகிய தலைமை அமைச்சராக அவன் தன் முப்பத்தோறாவது வயதிலேயே பதவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/17&oldid=1405519" இலிருந்து மீள்விக்கப்பட்டது