பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

9


நியாயமா, இந்த இணைப்பிலிருந்து விடுபட்டு, தனித்து நின்று, தனி அரசு நடத்தி, நாட்டுவளத்தைப் பெருக்கி, அந்த வளம் நாட்டுமக்களுக்கே பயன்படும்படி செய்வது குற்றமா? அதற்கு, திராவிடநாடு திராவிடர்க்கே என்பதன்றி வேறென்ன திட்டம் இருக்கமுடியும்? இருந்தால் கூறுங்கள்!

கப்பல் தட்டிலே நின்றுகொண்டு, வளமிகுந்த என் தாய்நாட்டிலே என் வாழ்வுக்குப் போதுமானவழி கிடைக்காததால், "இதோ நான் மலேயா போகிறேன்; கண்காணாச் சீமை; காட்டிலே வேலை செய்யப் போகிறேன்; தாயைப்பிரிந்து போகிறேன்; தாய் நாட்டிலிருந்து வறுமை என்னைத் துரத்துகிறது; வெளிநாடு செல்கிறேன் கூலியாக" என்று ஏக்கத்துடன் கூறித் தமிழன் சி்ந்திய கண்ணீர்கொண்டு எழுதப்பட்ட இலட்சியம், திராவிட திராவிடருக்கே என்பது.

புதிய வரலாறு


11—09—1938
தமிழ்நாடு தமிழருக்கு
என்று நாம் பரணி
பாடினோம்.

10—12—1939
தமிழ்நாடு தமிழருக்கே
என்ற திட்டத்தை நாட்டு
மக்களுக்கு விளக்க விழாக்
கொண்டாடப்பட்டது.


27—12—1938
வேலூர் தமிழர்
மாநாட்டில்

தமிழ்நாடு எதிர்காலத்
திட்டம் பேசப்பட்டது.

2—07—1940
காஞ்சிபுரத்தில்
திராவிடநாடு
பிரிவினை மாநாடு
நடத்தப்பட்டுப்
பிரிவினைக்குக் கமிட்டி
நியமிக்கப்பட்டது.