பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

இலட்சிய வரலாறு


29—12—38
சென்னை, ஜஸ்டிஸ்
மாகாண மாநாட்டில்
தமிழ்நாடு தனிநாடு
ஆகவேண்டும்

என்பது வலியுறுத்தப்பட்டது.

24, 25—08—1940
திருவாரூர்,
மாகாண மாநாட்டில்,
திராவிட நாடு
தனிநாடாக வேண்டும்

என்ற திட்டம் தீர்மானமாயிற்று.

20—8—44
மாகாண சேலம்
மாநாட்டில்,
திராவிட நாடு
தனிநாடாக வேண்டும்

என்பது
கட்சியின் மூலாதாரத் திட்டமாக்கப்பட்டதுடன்,
கட்சியின் பெயரே
திராவிடர் கழகம்
என்று மாற்றப்பட்டது.

29—9—1945
திருச்சியில்,
மாகாண மாநாட்டில்,
திராவிட நாடு
தனிநாடாக வேண்டும்

என்பது
மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
1—7—1947
திராவிட நாடு
பிரிவினை நாள்

கொண்டாட்டம்.


சொன்னோம்
பாகிஸ்தான் பெறுவது, இன் கபர்ஸ்தான் புகுவது என்று எண்ணுமளவுக்கு இஸ்லாமியர் துணி்ந்து விட்டனர். அவர்கள் தோட்டா இல்லாத துப்பாக்கிகளல்ல.
“விடுதலை”
1940 டிசம்பர் 16.
சொன்னார்
 "பாகிஸ்தான் திட்டம் ஆபாசமானது; விஷமத்தனமானது. காங்கிரஸ் யோசித்துப் பார்க்குமளவு யோக்யதை உள்ள விஷயம் என்று கூட அதனைக் காங்கிரஸ் கருதவில்லை"
1940 அக்டோபர்,
ஜவஹர்

நடந்தது?
பாகிஸ்தான் கிடைத்துவிட்டது.