பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 சி. என். அண்ணாதுரை கட்சியின் குறிக்கோள் கெட்டுவிட்டது என்று மேதாவி களிலே ஒருவரான சிலப்பதிகார உரையாசிரியர் சர். சண்முகனார் முழக்கமிட்ட பிறகு, ஞாயிறு நோக்கி நாத்தழும்பேற நிந்தித்த பிறகு, கிழமைதோறும் இந்தக் கிழத்தை நாங்கள் கவிழ்த்து விட்டோம் என்று வளையுள் நெளியும் சுனை விழுங்கிகள் சொல் லம்புகளை விட்டபிறகு, ஜல்லடம் கட்டிய வீரரும், புகலிடம் தேடிடும் வீணரும், கனலைக் கக்கிய பிறகு, சர்களும், திவான் பகதூர்களும் விருந்துண்டு, விருது புகன்று, வீர ரசம் பருகி, விடமாட்டோம் என்று ஆவேசம் பேசிய பிறகு, கட்சியிலே பிளவு என்று கலகப் பிரியர்கள் பேசிய பிறகு, காட்டுக் கூச்ச லிடுவோர் தானே மிச்சம், கண்ணியமானவர்கள் எங்கே என்று கனத்த குரலினர் கூறிய பிறகு, கட்சி கரைந்து விட்டது என்று கேலி பேசிய பிறகு, இந்தக் காட்சி--மக்கள் பலப்பல ஆயிரவர் கூடிய காட்சி-பட்டம் பதவி, தேர்தல் முதலிய பசையும் ருசியும் இல்லை என்று தெரிந்தும் கூடிய கோலம், சிறையும் பிறவும் கிடைக்கும் என்று தெரிந்தும் கூடிய கூட்டம், சர்வாதிகாரம் செய்கிறார், யாரையும் சட்டை செய்ய மறுக்கிறார் என்று பெரியா ரைப்பற்றிக் கூறப்படுவது தெரிந்தும் கூடிய கூட்டம். அமைப்பு இல்லை,ஆங்கில - தமிழ் தினசரிகள் இல்லை, ஆந்திர கர்நாடகம் போகவில்லை; பணம் பெறும் பிரசாரகர்கள் இல்லை - இவை கட்சி யிலுள்ள குறைபாடுகள் என்று சிலர் கூறினது தெரிந்தும் கூடிய இந்தக் கூட்டம், தவறான வழியிலே சென்றுகொண் டிருக்கும் ஒரு சிலருக்குக் கண்ணையும் கருத்தையும் திறந்திடும் காட்சி என்போம் ! சேலத்திற்குப் பிறகு, கட்சியிலே பிளவு. பெரியாரின் பலம் ஒடுங்கி விட்டது, பிளவு பலமாகி விட்டது என்று, கொட்டை எழுத்திலே அச்சிட்டு விட்டு, பெரியாரின் செல்வாக்கு அதனால் பட்டுப் போய்விட்டதாகக் கருதிக்கொண் டனர் சிலர்! அவர்களின் சிந்தனைக்கு ஒரு சிக்கலான வேலை, இந்தத் திருச்சி மாநாட்டுக் காட்சி! ஏன் கூடினர் இவ்வளவு மக்கள், எவ்வளவோ வசதிக் குறைவு இருந்தும்? கட்சியிலே பிளவு என்பது இந்த விளைவையா தரும். பிளவு என்பது உண்மையாக இருக்குமானால்? ஒரு சிலர் வழக்கமாகக் காணப் படுபவர், வருவதற்கு ஆருடம் பார்த்து, ஆள் அம்பு அனுப்பி, தங்கியிருக்கப் பங்களாவும், தர்பாருக்கேற்ற "தாசர்" கூட்டமும்,