உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

இலட்சிய வரலாறு


அந்த நாளிலே அவ்வளவு முடிந்ததே! இந்த நாளிலே !! எண்ணும்போதே களிப்பும் நம்பிக்கையும் கலந்து வருகிறது, கனிச் சாறும் கன்னல் சாறும் கலந்திருப்பது போல!

நாடாள, யாரேனும் வரட்டும், நாம் நாட்டு மக்களுக்கு, நமது பலத்தின்மீது ஆணையிட்டுக் கூறுகிறோம், அவர்களை "நல்ல பிள்ளைகளாக " நடந்துகொள்ளச் செய்வோம், நிச்சயமாக நம்மால் அது முடியும்!!

வேவல் தமது படைகளைப் பர்மாப் போர்களத்திலிருந்து இந்தியாவிற்கு அழைத்து வந்தார். போர்த் தந்திரம் தெரியாதவர்கள் கேலி செய்தனர்! பிறகு? அந்தமான் தீவுகளைக் கை விட்டனர். நையாண்டி செய்தனர், போர்முறை அறியாதார். இன்று? படை பலத்தைச் சிதற வைப்பதும், தாக்குதலுக்கு ஒரு சமயம் உண்டு என்பதை அறியாமல் தாக்குவதும் படைத்தலைவருக்கு இருக்குமானால், படை தப்பாது; வெற்றியும் கிட்டாது. காங்கிரஸ் டோஜோ, மலேயாவையும் ஜாவாவையும், பிலிப்பைனையும் பொல் துறைமுகத்தையும் பிடித்துக்கொள்ளட்டுமே, பயம் ஏன்? டோக்கியோவைத் தாக்குவோம், சமயமறிந்து அந்தத் தாக்குதலுக்குப் பிறகு, வெற்றிக் கொலுமண்டபம்,சரணாகதிச் சாஸனம் கையொப்ப மிடவேண்டிய இடங்களாக மாறுகிறது; கவலை ஏன் ? ஆனால், ரஷ்யப் படை, நாஜிப் படையுடன் கஷ்ட நஷ்டம் பாராது கடும் போரிட்டதாலே தான், மேற்கு அரசாங்கத்திலும் சரி, கிழக்கு அரசாங்கத்திலும் சரி, நேசநாட்டினரால் பிறகு வெற்றி காண முடிந்தது என்று கூறுவர்! உண்மை! அதுபோலத்தான், இன்றைய தேர்தல் போராட்டத்திலே, முஸ்லீம் லீக், ரஷ்யப் படையாக இருக்கிறது !! அதிலே சந்தேகம் ஏது? காங்கிரசுக்கு, முஸ்லீம் லீக், இந்தியாவின் ஏகபோக மிராசு பாத்யதை இல்லை என்பதை நிரூபித்துவிடப் போகிறது! ஆகவே இந்தத் தேர்தலிலே நாம் கலந்து கொள்ளாதது, கேடுள்ளதுமல்ல, காங்கிரசுக்கு இதன் பலனாக சர்வ வல்லமை ஏற்பட்டுவிடப் போவதுமில்லை. நமது போர்க்கருவிகள் பழுதுபட்டுக் கிடக்கின்றன! அவைகளைச் சரி செய்து