பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


இலட்சிய வரலாறு



"நான், திராவிடர் கழகத்தை அது ஜஸ்டிஸ் கட்சி என்ற பெயரோடு இருந்தகாலத்தில் இருந்ததுபோல் இது ஒருகட்சியல்லவென்றும், திராவிடர் கழகம் ஒரு பிரச்சார இயக்கம் என்றும் பத்து ஆண்டுகளாகச் சொல்லிவருகிறேன். அதனாலேயே திராவிடர் கழகத்தை, மக்கள் ஒரு கட்சி என்று கருதாமல் இயக்கம் என்றே கருதவேண்டும் என்பதற்காக, அதற்கு ஏற்றபடி கழகத்தை ஒரு பிரச்சார ஸ்தாபனமாகச் செய்துவருகிறேன். ஏனென்றால், 1925-இல் நாம் ஆரம்பித்து நடத்திவந்த சுயமரியாதை இயக்கம்தான், ஜஸ்டிஸ் கட்சியைக் கைப்பற்றி இயக்கப் பிரச்சாரம் செய்து வருகிறதே ஒழிய, இது ஒரு தனிக்கட்சியாளர் கையில் இல்லை. சுயமரியாதை இயக்கத்தின் திட்டங்களில், ஏதாவது ஒருசிறு மாறுதல் காணப்படலாமே ஒழிய, சுயமரியாதை இயக்க அடிப்படையிலும் அதன் தலையாய கொள்கைகளிலும் திராவிடர் கழகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. இதைச் சேலம் மாநாட்டிலேயே அண்ணாதுரை தீர்மானம் தெளிவுபடுத்தி ஆய்விட்டது. ஆகவே ஜஸ்டிஸ் கட்சி எந்த மக்களுக்காக என்று தோற்றுவித்து நடத்திவரப்பட்டதோ, அந்த மக்கள் (திராவிட மக்கள்) சுயமரியாதை இயக்கத்ததை அப்படியே ஒப்புக்கொண்டு பெரிதும் சுயமரியாதைக்காரர்களாக ஆகிவிட்டார்கள் என்பதும், சுயமரியாதைக்காரர்கள் அல்லாதவர்களாய் இருந்தவர்கள் மெல்ல நழுவிவிட்டார்கள் என்பதும்தான் கருத்தாகும். எனவே, சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகம் என்னும் பேரால், பெரிதும் தன்இயக்கப் பிரச்சார வேலையே செய்து வருகிறது என்று சொல்லலாம். அதனால்தான் நான் அடிக்கடி திராவிடர்கழகம் ஒரு பிரச்சார இயக்கம் என்றும், இது காங்கிரஸ்,