உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

43

சகித்துக் கொண்டோம்! பின்னர் "சல்லடம்" கட்டுவோம்.

இராமகிருஷ்ணர் படங்கள், கல்கத்தாவில் அச்சாகி நமக்குக் கிடைத்து, டால்மியா சிமிட்டி பூசப்பட்ட சுவரிலே டாட்டா கம்பெனி அனுப்பும் ஆணியை அடித்து மாட்டும் போதெல்லாம், இந்த இலட்சியம், மெல்ல காதருகே நின்று கேட்கும் "இதுதான் உன் நிலையா? உன் நாட்டிலே இரும்பு, இல்லையா?" என்று கேட்டுவிட்டுச் சிரிக்கும் ! ஷோலாப்பூர், பம்பாயிலிருந்து வேட்டியும், சேலையும், லாகூருக்கும் விஷாவாருக்கும் போக முடியாததால், அதிகமாக இங்கே வருகிறபோது, இலட்சியம் கவனத்துக்கு வரும்! வங்காள ரசாயன சாலையிலிருந்து வரும் மருந்து வகை இலட்சியத்தைக் கவனப்படுத்தும்! வெளி உலகுடன் நடத்தும் வியாபாரமும், கொள்ளும் தொடர்பும், விந்தியத்துக்கு மேலே உள்ளவர்களோடு முடிந்து விடுகிற போது, இலட்சியம் கவனத்துக்கு வரும். முதலில் கொஞ்சம்

தயக்கம், பிறகு தைரியம் உண்டாகும். நாம் எதிர்பாராத இடங்களிலிருந்தெல்லாம் "இந்த வடநாட்டு ஆதிக்கத்தை நம்மால் சகிக்க முடியவில்லை. திராவிட நாடு திராவிடருக்காக வேண்டும் என்ற இலட்சியம் பேசப்படும். அந்த நாளைக் காணவே இந்த நாட்களில் ஏற்படும் இழிவுகளை, பழிகளை, எதிர்ப்புகளை, ஏளனங்களைச் சகித்துக்கொள்கிறோம்—சகித்துக்கொள்வோம்—நாம் அல்ல இதிலே முக்கியம், நாடு !