பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118 ★ இல்லம்தோறும் இதயங்கள்


 ஆயிரம் ரெண்டாயிரமுன்னு கொடுத்தாரே அப்படிக் கூட கொடுக்காண்டாம். செலவுக்கு போதும்படியாய் கொடுக்கப்படாதா? ஐம்பது ரூபாய்ல மெட்ராஸ் வரைக்கும் அஞ்சு ரூபா ஆயிடும். டிக்கட்டு முப்பத்தஞ்சு. மீதி ரூபாய்ல, தூத்துக்குடியில் இருந்து ஊருக்குப் போகணும். இடையில வேற சாப்புடனும். திரும்பி வாரதுக்கு பணம் கொடுக்கல. ஒரு வேள வரக் கூடாதுன்னே நினைக்காரோ? யார் என்ன நினைச்சு என்ன? என் நிலைமை இப்படி ஆயிட்டு.....

கையில் இருந்த சூட்கேஸைவிட, உள்ளம் கனக்க அவள் கனவேகமாக ரயில் நிலையத்திற்குள் போனாள். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. ஒரே கூட்டம். ஏற முடியவில்லை. இன்னொரு பாஸஞ்ஜர் ரயிலில் ஏறினாள். அது மயானப்புகைபோல், கங்குலைக் கக்கிக்கொண்டே புறப்பட்டது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவளுக்கே ஆச்சரியம். "லேடீஸ் கம்பார்ட்மெண்டில் இருந்த அவளை, 'கம்பவுண்டர்' மணி பிளாட்பாரத்தில் நின்றுகொண்டு வரவேற்றான். அவள் கீழே இறங்கியதும் "நீங்க எப்படி புறப்படுறிங்க, யாரோட வாரிங்கன்னு கவனிச்சுக்கிட்டே இருந்தேன். சீமாட்டியா வாழ்ந்த உங்கள பிச்சைக்காரியா அனுப்பிட்டாங்க. நீங்க தப்பா நினைக்கமாட்டீங்க என்கிற தைரியத்துல வந்தேன். அதோட மாத்திரை தீர்ந்திருக்கும். வாங்கிக் கொடுத்துவிட்டுப் போகலாமுன்னு வந்தேன்." என்றான்.

இருவரும் மெளனமாக நடந்தார்கள். எழும்பூர் ரயில் நிலையத்திற்கருகே வந்ததும், அவளை காபி சாப்பிடக் கூப்பிட்டான். அவள் மறுத்துவிட்டாள். பிறகு ரயில் நிலையத்தில் வெயிட் மிஷின் அருகே அவளை உட்காரச் சொல்லிவிட்டு மாயமாக மறைந்தான். பிளாட்பாரத்தில்