பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 123


முதலிய எளியவர்களிடங்கூட அவர்கள் பேசியும் பேசாமல் நடந்தாள். பாதையில் நடுவில் நடக்காமல் இருமருங்கும் இருந்த வீடுகளில் ஒரு மருங்கில் சுவரோடு சுவராக, தன்னை மறைத்துக்கொண்டு தணலைக் காலில் வைத்தவள் போல் அவள் நடந்தாள்.

வாழ்வோடு வரும் தான், வாழாவெட்டிபோல் வந்திருப்பது அங்கிருப்பவர்களுக்குத் தெரியவேண்டாம் என்பதற்காக அவள் தெரிந்த தலையை மூடி, நீண்ட கைகளை மடக்கி நிமிர்ந்த தலையை குனிந்து நடந்தாள்.

அப்படியும் அவளை அடையாளம் கண்டுகொண்ட இரண்டு கிழவர்கள் அவளைப் பார்த்து "லட்டர் வந்துதாமா?” என்றார்கள் 'துஷ்டிக்' குரலில். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது தெரியாமலே, ஆமாம். இல்ல' என்று இரண்டையும் சொல்லிக்கொண்டு அவள் நடந்த போது எதிரே வந்த தங்கம்மாக் கிழவி அவளைக் கட்டிப் பிடித்துக்கொண்டே "பட்ட காலுலயே படுங்கறது சரியாப் போச்சே என் தங்கம் ! ஒனக்கா குஷ்டம் வரணும்? ஒனக்கா வரணும் ஒனக்கு வந்துதுன்னா யாருக்குத் தாம்மா வராது?" என்று முதுமைக் குரலில் முனங்கிய போது மணிமேகலை சிறுமைப்பட்டவள்போல் துடித்தாள். அவள் தன் நோயைப்பற்றி லட்டரில் எழுத வில்லை. அப்படி இருந்தும் பாட்டிக்கு எப்படித் தெரிந்தது? ஊர் விவகாரங்களின் துவக்கமே அவை முடிந்த பிறகுதான் இந்தப் பாட்டிக்குத் தெரியும். அப்படிப் பட்ட இந்தப் பாட்டிக்கு இது தெரிந்திருந்தால், ஊர் முழுவதும் தெரிந்திருக்கும். அட கடவுளே! குமரேச மாமாவுக்கு இளக்காரமா இருக்குமே! வெங்கடேசத்தான் நல்ல வேள, நாம இவள கட்டல'னு நினைச்சிருப்பாரே.

பாட்டி விடவில்லை. மூக்கைச் சிந்திவிட்டு, முழங்கையை துக்கிவிட்டு பெருவிரலை ஆட்டிக்கொண்டு