பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் ★ 127


காத்தாயிதான் வெடித்த விம்மலைப் பிடித்துக் கொண்டே பேசினாள்.

"ஒங்க வீட்டுக்காரரோட தாய்மாமனா அந்த மனுஷன்? அவன் நாய் மாமன் ! ஒங்களுக்கு குஷ்டம் வந்துட்டதா ஊரு முழுக்கும் தமுக்கு அடிச்சது மாதிரி பேசுனதோட, இந்த மவராசனுகிட்டயும் 'இனுமே நீங்க தேருறது கஷ்டம் கைய அரிச்சிட்டு, காலு விரலு மடங்கிட்டுன்னு, ஒரு நாளைக்கி ஒம்பது தடவ சொல்லிட்டுப் போயிட்டாரு. அவரு கையில கரையான் அரிக்க வாயில குஷ்டம் வர, அந்தப் பாவி எந்த நேரத்துல சொன்னானோ, அந்த நேரத்துல இருந்து ஒரு வாரம் வரைக்கும் இந்த மவராசன் உண்ணாம திங்காம பயித்தியம் பிடிச்சவரு மாதுரி அலஞ்சாரு. கடைசியில, ஒரு நாளு கை காலு இழுத்து இப்படிப் போயிட்டாரு."

காத்தாயியின் தழுதழுத்த குரலில், எல்லோரும் கிறங்கிப்போய், அந்தக் கிழவரையே பார்த்தார்கள். அவரோ, காணாததைக் கண்டுவிட்டவர்போல் மகளையே பார்த்தார். மகளோ.

திடீரென்று, அப்பாவின் கால்களைப் பிடித்துக் கொண்டே கதறினாள். அவர் கன்னத்தில் முத்தமிட்டு கட்டிலோடு கட்டிலாக அவரை அணைத்து அப்பா அப்பா' என்று வானம் விழும்படி பூமி பிளக்கும்படி கத்தினாள். "ஒங்களுக்காப்பா. ஒங்களுக்காப்பா இப்படி வரணும்?" என்று சொல்லிக்கொண்டே, பெற்றவனை தன் மடியில் வைத்துக்கொண்டே மருவினாள்.

இறுதியில் தங்கம்மா பாட்டி "எழுதாக் குறைக்கி அழுதா முடியுமா? எப்படியோ ஒய்யாவ நீயும் பார்த்துட்ட அவரும் ஒன்னப் பாத்துட்டாரு. இனும ஆண்டவன் விட்ட வழி!” என்று சொன்னபோது, கிழவரின் பொட்டல் கண்களில் பாலைவன நீரூற்றுப்