பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ♦ 181


தன் "பேக்கை" எடுக்கப் போனபோது மணிமேகலையும் தன் சூட்கேஸை எடுத்துக்கொண்டு அந்த அறையைவிட்டு வெளியேறி படிக்கட்டுக்கள் வழியாக கீழிறிங்கி தெருவுக்கு வந்து திரும்பிப் பாராமலே நடந்தாள். சிறிது நேரத்தில் ஒருவர் ஓடிவரும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தாள்.

கம்பவுண்டர் மணி ஓடிவந்தான். லுங்கி பனியனுடன் ஓடிவந்தான்.

“என்ன இப்படி ஒரே விசித்திரமா இருக்கு? இப்படியா போறது?”

“இதில் என்ன விசித்திரம்? அடையாறில் இருந்த விடுதி எட்வர்ட்ஸ் எலியட்ஸ் ரோடுக்கு வரும்போது, நான் போறதில் என்ன விசித்திரம் ?”

“நீங்க என்ன தப்பா நினைச்சிட்டிங்க.”

"தப்பா எடுக்கல. நாம அரக்கோணத்துல இருந்து புறப்படுறதுக்கு முன்னால ‘ஒங்கள தப்பா நினைச்சா. நெஞ்சுல புற்று வரும். வாய் அழுகிடுமுன்னு சொன்னேன். ஞாபகம் இருக்கா ? இப்போ... அப்படி நினைக்காததாலேயே அந்த ரெண்டும் வந்துடுமோன்னு நினைக்கேன். பரவாயில்ல. இருக்கிற ஒரு நோயோட, இது இரண்டு, மொத்தம் மூணு."

"நான் ஏதோ கற்பழிச்சிட்டது மாதிரி..."

"ஒரு பெண்ணுக்கு நன்மை செய்யுறதாய் ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்திட்டு, அப்புறம் அவளை அடுத்துக் கெடுப்பதைவிட கற்பழிப்பு எவ்வளவோ மேல்! ஒண்ண மட்டும் மறந்திடாதிங்க மணி என்கூடப் பிறக்காத சகோதரர்களாய் மூணுபேரை நினைச்சேன். அதுல ஒருவர் இப்போ செத்துட்டார். நான் வாரேன் மணி. வேண்டிய கணவனுக்கு விரும்பாதவளா.போகும்போது தனிவழியில்