பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ♦ 161


லெவலுக்கு வந்து சகஜமா பழகுறதுல நீ சந்தோஷப் படனும்."

"ஆஹாஹா! இப்போ வார சந்தோஷத்த மாதிரி, எப்போதுமே எனக்கு சந்தோஷம் வரல. ஒன் அண்ணன் என்னை உதைக்க வந்தான் பாரு, அப்போ வந்த சந்தோஷத்தவிட இது அதிகம். கூத்துக்கு கூட்டிக்கிட்டு போன ஒரு பயல் நான் துங்கும்போது என் வெள்ளி அரணைக் கயிற்றை அறுத்துக்கிட்டு ஒடுனபோது ஏற்பட்ட சந்தோஷம், இந்த சந்தோஷத்துக்கு ஒரு தூசு"

"நீ இப்படியே பேசினால், நான் இதுக்கு மேல நடக்க மாட்டேன். ஆனானப்பட்ட சந்திரமதியே அடிமையாகலியா? திரெளபதி அஞ்ஞான வாசத்துல சேடியாகலியா?"

"அவங்க கணவங்க வந்து காப்பாத்துவாங்க என்கிற நம்பிக்கையில இருந்தவங்க. ஆனால் நீ.?"

"என் அண்ணன் கோவிந்தன், எனக்கு சுயமரியாதையோடு வாழறதுக்கு வழிகாட்டுவார் என்கிற நம்பிக்கையில இருக்கிறவள் நான்!”

"சரி நீ சின்ன வயசில சொன்னத கேட்டால்லா இப்போ கேட்பே. என்னோட முன்னாள் பாய்ஸ் கம்பெனி பவளக்கொடி, இப்போ சினிமாவுல கறுப்புப் பண்ம் வாங்குற அளவுக்கு முன்னேறியிருக்கிற நட்சத்திரம். அந்த நட்சத்திரம் பங்களாவுல வீட்டு வேலயப் பார்க்கதுக்கு. பார்க்கதுக்கு."

'கூத்து கோவிந்தன் விம்மினான். வாயில் துண்டை வைத்தான். "எதுக்குண்ணே அழுவுற? என்ன நடந்துட் டுன்னு அழுவுற? இதோ பாரு! கண்ண துடைச்சுக்க வாரபோற ஆட்கள் வேடிக்கை பார்க்கது மாதிரி பார்க்காங்க. அட ஒன்னத்தான்! பரமசிவமே பிட்டுக்கு மண் சுமக்கலியா? மகாத்மா காந்தி எதிரிக்கும் செருப்பு