பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 209




தனியாப் போவணுமாம். இதுமாதிரி என் தங்கச்சிய சிரமப்பட்டு பார்க்கணுமுன்னு நினைச்சே இதுவரைக்கும் வரல. ஆனால் இப்ப ஒனக்காகவே ரயிலேறி ஒனக்காகவே ஒரு பொண்ண கிண்டல் பண்ணுன ஒரு பயல உதச்சிட்டு இந்த பாழாப் போற பஸ்ல ஏறி வாரேன். இது பஸ்ஸா? சரியான நொண்டிப் பசு, ஒங்க வீட்ல குட்டி போட்டுட்டு, அப்புறம் எழுந்திருக்க முடியாமல் கிடந்தது பாரு, மயிலப் பசு, அதுமாதிரி ஒரு பஸ் நின்னு நின்னு ஒரு இடத்துல ஒரேயடியாய் நின்னே போச்சு. நான் நடந்தே வாரேன். நான் சொல்றது கொஞ்சம் பைத்தியக்காரத்தனந்தான். ஆனால் ஏதோ ஒரு வகையான பைத்தியம் இல்லாம உலகத்துல எவனுமே கிடையாது."

இருவரும் வரவேற்பு அறைக்கு வந்தார்கள். 'அம்மாவை அறிமுகப்படுத்தலாம் என்று போனாள். அந்த மூதாட்டி கண்களை மூடிக்கொண்டிருந்தாள். சத்தம் போடாமலே ரத்தினத்தை வெளியே கூட்டிக்கொண்டு வந்தாள்.

"அப்பா எப்படி இருக்காரு அண்ணே ?”

"யாரோட அப்பா?”

"என்னோட அப்பா! ஒன்னோட சித்தப்பா !”

"என்னம்மா நீ? நாலு மாதத்துக்கு முன்னால நடந்து போன சங்கதிய இப்போ கேக்குற? வெங்கடேசன் சொல்லலியா? உடனே இந்த கூத்துப் பயகிட்டகூட சொல்லி யனுப்புனேன். சொல்லலியா? ஒரு வேள ஒன் மனசக் கஷ்டப்படுத்தாண்டாமுன்னு சொல்லல போலுக்கு."

மணிமேகலை அவனிடம் கேட்கவில்லை. செத்துட்டார் என்கிற வார்த்தையை தன் காதுபடக் கேட்க வேண்டாம் என்று நினைத்தவளாய் தலையை இரண்டு தடவை ஆட்டிக் கொண்டாள். உள்ளத்தில் ஏதோ ஒரு இடம் சூன்யமாக இருந்தது. அதேசமயம் அப்பாவின்