பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



                                                சு. சமுத்திரம் + 21

  "நாய் வால நிமுத்துனாலும் நிமுத்தலாம். ஆனால், ஒன் கூன நிமுத்த முடியாது. இது கூனியோட கூனவிட மோசமான கூனு. ஆயிரம் ராம பாணங்களாலயும் அசைக்க முடியாத கூனு."
  மணிமேகலை சிரித்துக்கொண்டே சீரியஸாகப்  

பேசினாள்."ஏதேது, நான் நின்னால் ஒங்களுக்குள்ள சண்டை நிக்காது போலுக்கே?"

   'கூத்து' கோவிந்தன் கெஞ்சினான்:
  "நீங்க நில்லுங்க அம்மா. எங்களுக்குள்ள இது சகஜம்.  பாசத்த கிண்டலா காட்டுவோம். பணக்காரங்க மாதுரி கிண்டல பாசமா காட்ட மாட்டோம்.”
  இதற்குள் மனைவியின் தூண்டுதலாலோ அல்லது தற்செயலாகவோ ஏழை எளியவர்களிடம் பேசி, அந்தஸ்தைக்  கெடுப்பது போலவும், அதைத் தடுப்பதற்கென்று வந்தது  போலவும், மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டு வந்த  மணிமேகலையின் அண்ணன், "மேகலா, வீட்டுக்குள்ள போ,  அண்ணி கூப்புடுறாள். ஏண்டா கோவிந்தா, எதுக்குடா கூத்து கீத்துன்னு போடுற? பேசாம மெட்ரஸுக்குப் போ. ஒன்  அழகுக்கு நீ மட்டும் சினிமாவுல சேர்ந்தால், ஸ்ரீதேவிக்கும், ஸ்ரீபிரியாவுக்கும் மார்க்கெட் போயிடும். பொய் சொல்லலடா... நிசமாத்தான் சொல்லுதேன்” என்றான்.  கோவிந்தன், மணிமேகலையை கண்ணைச்  சிமிட்டிக்கொண்டே பார்த்தான். "பாத்தியா... பணக்காரங்க,  கிண்டல பாசமா காட்டுவாங்கன்னு நான் சொன்னது  புரியுதா” என்று அவன் கேட்பது போலிருந்தது. அவனது  அனுமானத்தை ஊர்ஜிதப் படுத்துவதுபோல், ராமக்கா  யோவ்! நீரு பாட்டுக்கு கேப்பார் பேச்சைக் கேட்டுட்டு,  மெட்ராஸ் கிட்ராஸுன்னு போயிடாதயும். அங்க போனால், நாயி படாத பாடு படணும். இங்க