பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 ♦ இல்லம்தோறும் இதயங்கள்

 கனகம், தலையில் கை ஊன்றிக்கொண்டாள். புருஷன் மீது லேசாகச் சாய்ந்துகொண்டாள். ஒப்பாரி வைக்காத குறையாக முழங்கினாள்.

“எனக்கு அப்பவே தெரியும். அவ தளுக்கி மினுக்கும் போதே தெரியும். பட்டணத்து முண்ட, அவள் புத்தியக் காட்டிட்டாள். சினிமாக்காரி மாதிரி வந்து, வீட்டயே சினிமா கொட்டகயா மாத்திட்டா, பாவி மனுஷா! ஏன் இப்படி கல்லு மாதுரி இருக்கியரு? படிச்ச வீட்டு சம்பந்தம் வரப்போவுது. எல்லாரும் ஒம்ம தலையில மிளகாய் அரைக்கப் போறாவ. நீரு தலய நீட்டும். நீரு மாடா உழச்சி நாயா திரியுறியரு. ஒம்ம தம்பியும் அந்த சினிமாக்காரியும் ஒய்யாரமாச் சுத்தப் போறாவ! பாவி மனுஷனுக்கு வாக்கப்பட்டு பாழாப் போயிட்டேனே.... பாழாப் போயிட்டேனே...”

அருவருப்படைந்த மணிமேகலை, வேகமாக எழுந்து அதிவேகமாக வெளியே வந்தாள். அங்கே கனகம் பேசுவதைக் கேட்டுக்கொண்டு, கல்லாய் சமைந்தவர்கள் போல் பாமாவும் சந்திரனும் நின்றார்கள். சந்திரன், முதல் தடவையாகக் கோபப்பட்டு முன்னேறப் போனான்.

இதற்குள் தபால்காரர் வந்து ஒரு தந்தியைக் கொடுத்தார். இதனால் சந்திரன் ஆவேசம் தணிந்து நின்றபோது, தந்தியைப் பிரித்துப் படித்த மணிமேகலை திகைத்து நின்றாள்.

4

மறுநாள் காலைப் பொழுது.

மணிமேகலையும் பாமாவும் ஊருக்குப் புறப்பட்டார்கள். ‘பேமிலி பிராப்ளம்-ஸ்டார்ட்’ என்று தன்