பக்கம்:இல்லற நெறி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

இல்லற நெறி


பார்வை, மணம், கேள்வி, வேறு புலன்கள் அல்லது நினைவு டன் தொடர்புடையவை. காதல்கொண்ட பெண்ணையோ, கவர்ச்சியையுடைய பெண்ணையோ காண்டல், காம உணர்ச் சியை எழுப்பவல்ல இசையினைக் கேட்டல், பெண்ணின் மீது தடவப்பெற்றுள்ள மணப் பொருள்களின் மணத்தை முகர் தல் போன்ற செயல்கள் இவ்விளைவினை உண்டாக்கலாம்: இவையும் இவைபோன்ற ஆயிரக்கணக்கான கூறுகளும் விரைச் சுரப்பிகளின் தலையீடின்றியே கலவித்துடிப்பினைக் கிளர்ந்தெழச் செய்யக்கூடியவை. மூளையின் காம விகாரம் கலவித்துடிப்பாக மாற்றப்பெற்று இனப்பெருக்க உறுப்பு களை அடைந்ததும் விறைத்தலை நிகழ்விக்கின்றது.

மேற்கூறியவற்ருல் விரைகளின் செயலாலோ, கற்பனை யின் காரணமாகவோ விறைத்தல் நிகழ்கின்றது என்பது தெளிவாகின்றது; எனினும், முதலாவதில் விளைவு உடனே நிகழ்கின்றது; இரண்டாவதில் காமச் சுரப்பிகள் சரியாகச் செயற்பட்டால்தான் விளைவு ஏற்படக்கூடும். சிறுநீர்ப்பை நிரம்பியிருத்தல், குடல் நிரம்பியிருத்தல்போன்ற காரணங் களும் விறைத்தலை நிகழ்விக்கும் வேறு கூறுகளாகும். அதி காலையில் படுக்கையை விட்டெழுந்ததும் காணப்பெறும் விறைத்தல் காம உணர்ச்சியைப் பற்றியதன்று. சிறுநீர்ப்பை நிரம்பியிருப்பதாலும், மலக்குடல் புராஸ்டேட் சுரப்பியை அமுக்குவதாலும் இது நிகழ்கின்றது. எனினும், இந்த விறைத்தலும் எண்ணங்களின் தொடர்பினுல் உண்மையான விறைத்தலில் கொண்டுசெலுத்துவதை நாம் அநுபவத்தால் அறியலாம்.

ஆண்குறி விறைக்கும்பொழுது சிலசமயம் ஒருசில திரவத் துளிகள் குறியின் நுனியில் காணப்பெறலாம். இப் பாய்மம் விந்துவின் ஒரு பகுதியன்று. ஆண்குறுயினுள் நெடுகவரும் சிறுநீர்ப்புறவழி சிறுநீர் வருவதற்கும், விந்து வெளிப்படு வதற்கும் பயன்படுகின்றது என்பதை நீ நினைவு கூர்வாயாக: பொதுவாக, சிறுநீர் அமிலத்தன்மையுடையது என்பதை நீ

57. காமச் சுரப்பிகள்--Sex glands.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/102&oldid=1285126" இலிருந்து மீள்விக்கப்பட்டது