பக்கம்:இல்லற நெறி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் 105.

டையை அடைகின்றன. இவற்றுள் மிக வன்மையான வித் தணுதான் தன் தலையில்ை முட்டையைத் துளைத்து வாலறு பட்டு முட்டையினுள் தங்குகின்றது. சண்ணுக்குப் புலனகா நுண்ணனு உலகங்களிலும் ஆணே பெண்ணை நாடிச் செல்லு வதும், அதுவே அதிகமாக இயங்குவதும் நம்மை வியப்படை யச் செய்கின்றன: காதல் உலகிலும் கலவி புரியும் செய விலும் ஆண்கள்தாமே அதிகமாக இயங்குகின்றனர்? பெண் தானே அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருடன் இணைகின்ருள்? முட்டையிலும் தேர்ந்தெடுக்குந் திறன் இயற் கையிலேயே அமைந்து கிடக்கின்றது. போட்டி போட்டுக் கொண்டு தன்னை நோக்கி வரும் விந்தணுக்கள் தன்னுள் நுழைவதற்கேற்ற சாதகமான வாய்ப்புடன் முட்டையின் சிறு அறைகளாலமைந்த மென்ருேல்82 விரிந்த நிலையிலுள் ளது. ஒரு வன்மையான விந்தணு உள் நுழைந்ததும், வேறு அணுக்களுக்கு இடங் கொடாது முட்டை தன் மென்முேலைச் சுருக்கிக் கொள்ளுகின்றது. ஆண்டவன் படைப்பின் விந் தையை எண்ணி எண்ணி மகிழ்வாயாக. பண்டையோர் திருமணத்தில் சுயம்வரம்’ என்ற ஏற்பாட்டை அமைத்த முறையை எண்ணுக. அருச்சுனன் ஒருவன்தானே மச்சக் குறியை வீழ்த்தி திரெளபதியை அடையமுடிந்தது? இன்றும் ஒருவருக்கு மணம் பேசி உறுதியான பிறகு அந்த வீட்டில் வேறு யாரும் பெண்பேச நுழைவதில்லையல்லவா?

பிரம்மச்சரியம்: ஒருவர் புணர்ச்சியில் ஈடுபடாமலேயே விந்துவினைக் காப்பாற்றினல் ஏதாவது நன்மையுண்டா என்று நீ கேட்கலாம். இதுபற்றி நம் முன்னேர்கள் ஏராள மான கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர். பிரம்மச்சரி யம் காத்தல்’ என்பது நம் நாட்டு அறிஞர்கள் கண்ட முறை. புத்தர், சங்கரர் போன்ற ஞானச் செல்வர்கள் இம் முறைக்கு எடுத்துக்காட்டுக்களாவார்கள். பிரம்மச்சரியங் காத்த காங்கேயன் - வீட்டுமன் - பேராற்றலுடன் திகழ்ந்ததைப்

62. சிறு அறைகளாலமைந்த மென்ருேல்-Cellular

membranę.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/109&oldid=597831" இலிருந்து மீள்விக்கப்பட்டது