பக்கம்:இல்லற நெறி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

இல்லற நெறி


விந்தணுக்கள் எப்பொழுதும் தாமாக இயங்கிக்கொண்டு தமக்குச் சாதகமான இடத்தை நோக்கியே அசையும்தன்மை யைப் பெற்றிருப்பது வியப்பினும் வியப்பாகும். விந்துப் பாய்மத்திலும், யோனிக் குழலிலும், கருப் பையிலுமுள்ள சளி போன்ற அவை நகர்வதைக் கவனித்தால் அவை கருப் பையை நோக்கி நகர்வது புலனுகும். யோனிக் குழலிலும் கருப் பையிலுமுள்ள திரவத்தை நுண் பெருக்கியின் மூலம் சோதித்தால் இவ்வுண்மை தெளியப்படும்; இதனைப் படத்தில் (படம்-12) காண்க: யோனிக் குழலில் சுரக்கும்

படம்-12 விந்தணுக்கள் கருப்பையால் கவரப்பெறு வதைக் காட்டுவது:

அமிலம் (லாக்டிக அமிலம்) அவற்றிற்குத் தீங்கு புரியுமாத வின். அவை இங்கனம் நகருகின்றன. ஒரு விந்தனு ஒரு முட்டையினுள் சென்று தங்குவதே கருவுறுதல் ஆகும் என் பதை நீ நன்கு அறிவாய்; விரைவாக நகர்ந்து செல்லும் விந்தனுக்களே தம்மைவிடச் சற்றுப் பெரிதாகவுள்ள மும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/108&oldid=1285129" இலிருந்து மீள்விக்கப்பட்டது