பக்கம்:இல்லற நெறி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் 139

டாக்குகின்றது என்று கண்டறித்துள்ளனர். உடலியல்பற் றிய கூறுகளும் உள்ளக்கிளர்ச்சி பற்றிய கூறுகளும் மாத விடாய் வட்டத்தின் ஒழுங்கினைப் பாதிக்கின்றன.

மாதவிடாயின்பொழுது வெளிப்படும் குருதிக் கசிவு மூன்று நாட்களுக்காவது இருந்துகொண்டிருக்கும். சில பெண்களுக்கு ஏழு அல்லது எட்டு நாட்கள் கூட நீடித்து வெளிப்பட்டுக்கொண்டிருப்பதுண்டு. ஒரு முறை வெளி வந்த குருதிக் கசிவு நிற்காமல் பத்துப் பதினைந்து நாட்கள் வெளிப்பட்ட வண்ணமிருந்தால், தக்க மருத்துவரை நாடிச் சிகிச்சை செய்துகொள்ளவேண்டும். மாதவிடாயின்பொழுது வெளிப்படும் குருதி முதல் நாளும் கடைசி நாளும் வெளுத்த சிவப்பாகவும் இடை நாட்களில் நல்ல சிவப்பாகவும் இருக் கும். இவ்வாறு வெளிப்படும் குருதி உறைந்து கட்டிக் குரு தியாவதில்லை என்பது ஈண்டு அறியத் தக்கது. இக்குருதி வெறுக்கத்தக்க துர்நாற்றத்தைக் கொண்டுள்ளது. ஒவ் வொரு மாதவிடாயின் பொழுதும் ஒரு பெண் கிட்டத்தட்ட மூன்றிலிருந்து எட்டு அவுன்சுவரை குருதியை இழக்கின்ருள். இதற்கு மேலும் குருதி வெளியேறினுல், பெண்ணுக்குக் குருதிச் சோகை ஏற்படும். ஆகவே, தக்க சிகிச்சை மூலம் குருதி யொழுக்கினை மட்டுப்படுத்துதல் மிகவும் இன்றியமை L}fTASS.

பூப்பின் அறிகுறிகள்: ஒரு பெண்ணுக்குப் பூப்பெய்தும் காலம் நெருங்கியதும் அவளுடைய தோற்றத்திலும் மன நிலையிலும் உடல் அமைப்பிலும் பல மாறுதல்கள் நிகழ் கின்றன. கொங்கைகள் பருத்து உருண்டு நல்ல செழுமையை அடைகின்றன. இடும்பெலும்புக்கட்டு நன் ருக வளர்ந்து உறுதியை அடைகின்றது. உடல் முழுவதும் பரவலாகக் கொழுப்பு படிந்து உடலுக்குச் செழிப்பான தோற்றத்தையும் தோலுக்கு ஒருவித மினுமினுப்பையும் கொடுக்கின்றது. பெண் குறியிலும் அக் குளிலும் உரோமம் முளைக்கத்தொடங்குசின்றது. உடல் மாறுதல்களைப்போலவே உள்ளத்திலும் மாறுதல்கள் ஏற்படுகின்றன. சிறுமியாக இருக்கும்பொழுது இருந்த களங்கமற்றபார்வை, கபடமற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/145&oldid=597901" இலிருந்து மீள்விக்கப்பட்டது