பக்கம்:இல்லற நெறி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் £45

பொதுவான உடல் வலுக்கேடு, ' குறிப்பிடத்தக்க மலச் சிக்கல், இன்னும் பல்வேறு கூறுகள் வலியுடன் கூடிய மாத விடாயை விளைவிக்கின்றன. உள்ளக் கிளர்ச்சிகளிலேற்படும் கலைவுகளே மாதவிடாய்த் தொந்தரவுகளே உண்டாக்குகின் றன என்று உளநோய் மருத்துவர்கள்' கூறுகின்றனர்; ஆனல், வேகமான நாகரிக வாழ்க்கை, தவருன உணவுப் பழக்கங்கள், தேவையான தசைவளர்ச்சியின்ம்ை, நரம்புக் கேடுண்டாகும் போக்குகள் போன்றவை ஒரளவு இத்தகைய வலியுள்ள மாதவிடாய்க்குக் காரணங்களாகலாம். இதுபற் றிய முழு விவரங்களையும், சிலரிடம் அதிகமான ஒழுக்கு ஏற்படுவதன் காரணங்களேயும், முறை தவறி மாதவிடாய் ஏற்படுவதன் காரணங்களையும், பிற செய்திகளையும், சில மருத்துவ நூல்களில் கண்டு கொள்க. அச் செய்திகள் முழுவதையும் இங்கு விளக்குதல் இயலாது.

சில பெண்களிடம் மாதவிடாய்தோறும் ஏற்பட்டிருந்த வலி திருமணம் புரிந்துகொண்டதும் மறைந்து போவதையும் நீ கேள்வியுற்றிருப்பாய். ஆனால், இத்தகைய நிலையில் மாற் றம் வலியேற்படுவதன் அடிப்படையான காரணத்தைப் பொறுத்தது. திருமண உறவில்ை ஏற்பட்ட உடல் உள்ளக் கிளர்ச்சி மாற்றங்கள் மாதவிடாய்ச் செயலில் செல்வாக் கினைச் செலுத்தி வலியைப் போக்கலாம். பெரும்பாலும் இந் நிலை ஏற்படுவது அரிது. பெண்கள் திருமணத்திற்குப் பிறகு, ஒழுங்கான இணைவிழைச்சினை மேற்கொண்டு நல்ல உச்ச நிலை உணர்ச்சியினைப் பெறுவதால் அவர்கள் குற்பைகளின் செயலில் மேம்பாடு ஏற்படுகின்றது. சரியான அளவு ஹார் மோன்கள் சுரந்து ஒரளவு இத்தொல்லையைப் போக்குகின் றன. ஆனல் பெரும்பாலோருக்குக் கருப்பம் உண்டாகி முதற் பிள்ளைப்பேறு ஏற்பட்டவுடன் இந்த வலி முற்றிலும்

محاسبه

1.37: suspišG&G)—Debility:

128: g-airGổg mưi tnG5#glauff-Psychiatri8t.

129. The Illustrated Encyclopedia of Sex (Cadillac Publishing co, , Inc., New York) ué, (90-99).

靈一10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/151&oldid=597908" இலிருந்து மீள்விக்கப்பட்டது