பக்கம்:இல்லற நெறி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

இல்லற நெறி


நீங்கிவிடுகின்றது. பிறப்புறுப்புகளில் ஏற்படும் ஒழுங்கான மாற்றங்களும், வழியமைப்பில் ஏற்படும் மாறுபாடும், மாத விடாய் வட்டத்தில் ஏற்படும் மாற்றமுமே இதற்குக் கார ணங்களாகும்.

மாதவிடாயின்பொழுது கவனம்: மாதவிடாயின்பொழுது என்ன செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொரு பெண்ணும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்; மாதவிடாயின் பொழுது உட்புறம் அணிந்துக்கொள்ளும் பாதுகாப்புத்துணி மிகவும் தூய்மையானதாக இருத்தல்வேண்டும். இதற்கென்று பிரத்தியேகமான முறையில் தயாரிக்கப்பெற்று விற்கப் பெறும் பஞ்சு மிகவும் நல்லது. ஆனால், ஒழுக்கு அதிகமாக வுள்ள பொழுது இஃது அவ்வளவாகப் பயன்படுவதில்லை; அழுக்குத் துணிகளை ஒரு பொழுதும் அணிதல் கூடாது. காரணம், பெண் உறுப்பின்வழியே நச்சுக் கிருமிகள் உட் சென்று வலிப்புநோய்' போன்ற நச்சுச் சன்னியை உண் டாக்கிவிடுதல் கூடும். மாதவிடாயின்பொழுது தீட்டுக் காரி என்று கேவலமாக நினைத்துக் கொள்ளாமல் காலை யிலும் மாலையிலும் குளித்து உடலைத்துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். உட்புறம் அணியும் பாதுகாப்புத் துணி யையும் இரண்டு மணிக்கொரு தடவை மாற்றிப் புதிய துணியை அணிந்துகொள்ளவேண்டும். பெண் உறுப்பின்மீது குருதி கசிந்து உறைந்து காய்ந்து விடும்படி விடக்கூடாது: அவ்வப்பொழுது வெந்நீரில் கழுவித் துடைத்துத் தூய்மை யாக்கிக் கொள்ளுதல் வேண்டும். இக்காலத்தில் இளஞ் சூடான வெந்நீரில் குளிப்பது நல்லது.

மாதவிடாயின்பொழுது அளவான உடற்செயலால் திங்கொன்றும்இல்லை; அளவுக்கு மீறிய ஒழுக்குஇருப்பினும், ஒய்விலிருப்பதே நல்லது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பெண்கள் விளையாட்டுகளில் ஈடுபடுதல் கூடாது. இதல்ை உடற் சோர்வு ஏற்படுவதுடன் இடுப்பெலும்புக்கட்டுப்பகுதி யில் அதிக நெருக்கம் ஏற்பட்டு வேறு தொந்தரவுகளும் உண்டாகும். -

130. வலிப்பு நோய்-Tetanus)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/152&oldid=1285151" இலிருந்து மீள்விக்கப்பட்டது