பக்கம்:இல்லற நெறி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் 159

கொன்று நெருங்கியே உள்ளன. மேலே காணப்பெறுவது சிறுநீர்ப் புறவழியின் திறப்பு; இது மிகவும் சிறியது; இது வெளிப்புறப் பிறப்புறுப்புகளின் மடிப்புகளினிடையே இருப்பதால் இதனைப் பிரித்தறிதலே சிலசமயம் கடினமாகி விடுகின்றது. இதற்குச் சற்றுக் கீழே, ஒரே நேர்க்கோட்டில், யோனிக்குழலின் திறப்பு உள்ளது; அதற்கும் இரண்டு அங்கு லத்திற்குக் கீழே மலவாயின் திறப்பு இருக்கின்றது இந்த மலவாய் மலக்குடலுக்கும் குடல் வழிக்கும் கொண்டு செலுத்தும்.

கொங்கைகள்: இதுகாறும் பெண்ணின் வெளிப்புறப் பிறப்புறுப்புகளை ஒரளவு விளக்கினேன். எனினும், இவற் றுடன் சேர்ந்து ஆராய வேண்டிய ஒரே ஒர் உறுப்பு உண்டு. இந்த உறுப்புதான் கொங்கைகள் அல்லது தாய்ப்பால் சுரப்பிகளாகும். இவற்றிற்கும் பிறப்புறுப்புகள் செயற்படுவ தற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பெண்ணிடம் இடை நிலைப் பாலறிகுறிகளைக் காட்டுவதில் இவ்வுறுப்புகள் மிகமிக முக்கியமானவை. இவற்றின் வளர்ச்சி பெண்ணின் காமச் சுரப்பிகளில் ஊறும் சுரப்பிச் சாறுகளால் பெரிதும் மாறு படுகின்றது. சிறு வயதில் சிறுவனின் கொங்கைகளுக்கும் சிறுமியின் கொங்கைகளுக்கும் வேற்றுமையே இல்லை: பூப்பு எய்தும் காலத்தில்தான் சிறுமியின் கொங்கைகள் படிப்படி யாகப் பருத்துத் திரண்டு உருண்டைவடிவத்தைப் பெறுகின் றன. புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்குப் பால் சுரப்பதே கொங்கைகளின் முதல்நிலைச் செயலாகும். எனினும், இச் செயலுடன் இவை பெண்ணிடம் காம உணர்ச்சிகட்கும் நிலைக்களகை அமைகின்றன; அவளுடைய துலங்கல்களிலும் எதிர்வினேகளிலும் முக்கிய பங்கினையும் பெறுகின்றன. சிறப் பாக முலைக் கண்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள கருநிற முள்ள பரப்புகளிலும் மிக நுண்ணிய தசைநார்களும் சுருங்கி நீளும் இழையமும் அமைந்துள்ளன. அவை த்ொடுதலாலும் காமத் தூண்டலாலும் சுருங்கி விறைத்தநிலையை அடைகின்

166 காமச் சுரப்பிகள்-Sex glands,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/165&oldid=597924" இலிருந்து மீள்விக்கப்பட்டது