பக்கம்:இல்லற நெறி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

இல்லற நெறி


முதிர்ச்சியடையாத பெண் பிராணியிடம் இந்த அறுவைச் சிகிச்சை செய்தால், பிறப்புறுப்புகள் சாதராணமாக வளர்வதில்லை. கருப்பை குழந்தையினுடையதைப் போலி ருக்கின்றது; தாய்ப்பால் சுரப்பிகள் சிறியனவாகவுள்ளன: அப்பிராணியும் கிட்டத்தட்ட அலித்தன்மையைக் காட்டு கின்றது. முதிர்ந்த பிராணியிடம் குற்பைகளின் நீக்கம் படிப்படியாகக் கருப்பை, கருக்குழல்கள், யோனிக்குழல் ஆகியவை ஊட்டமின்றி மறையத் தொடங்குகின்றன.' அப்பிராணியும் கொழுத்துக் காணப்படுகின்றது; சோம்பிய நிலையில் புணர்ச்சி உந்தலின்றியும் போகின்றது.

ஒரு பெண்ணிடம் இந்தச் சூற்பைகளை நீக்கினல், அத ல்ை ஏற்படும் விளைவுகள் ஆவிளுடைய வயதினைப் பொறுத் துள்ளன. மிக இளமையின் நீக்கப் பெற்ருல் ஏற்படும் விளைவு களும் குறிப்பிடத் தக்கனவாக இருக்கும். பூப்பெய்து வதற்கு முன் ஒரு சிறுமியிடமிருந்து குற்பைகளை நீக்கினல், அவளிடம் பூப்பு நடைபெருது; அவளுடைய பிறப்புறுப்பு களும் கொங்கைகளும் வளர்ச்சியுருமல் குழந்தையினுடைய வைபோலவே இருக்கும். மேலும், அவளிடம் சாதாரண மாக ஒரு பெண்ணிடம் அமையவேண்டிய உடலியல்பற்றிய சிறப்பியல்களும் வளர்ச்சி பெரு. இந்த அறுவை சிகிச்சை பெண் பூப்பெய்திய பின்னர் செய்யப்பெற்ருல், மாற்றங் களில் அதிக வேறுபாடுகள் இரா. மலட்டுத்தன்மை, மாத விடாய் நிற்றல் பிறப்புறுப்புகளின் அளவு குறைதல், உடல் கொழுத்துப் போதல் ஆகிய ஒரு சில விளைவுகளையே நாம் காண்கின்ருேம். சூதக ஒய்விற்குப் பிறகு சாதாரணமாக ஒரு பெண்ணிடம் ஏற்படும் உள்ளக்கிளர்ச்சி, மனநிலைபற்றிய எல்லாவித மாற்றங்களும் இவளிடம் ஏற்படலாம். எனினும் பூப்பெய்திய பிறகு இரண்டு சூற்பைகளையும் நீக்கி விட்டா லும் காம உணர்ச்சி-புணர்ச்சி நாட்டம்-சிறிதும் பாதிக் கப்பெறுவதில்லை; மானிடப் பெண்ணிடம் பால் துடிப்பினை விளைவிக்கும் ஹார்மோன்செயலைவிட பண்பாட்டு, உளவி

170; ஊட்டமின்றி மறைவு-Atrophy,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/168&oldid=1285159" இலிருந்து மீள்விக்கப்பட்டது