பக்கம்:இல்லற நெறி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம் 193

குருதி பெண்ணுறுப்பில் தோன்றும். குருதியின் அளவு குறைவாகவும் இருக்கலாம்; அதிகமாகவும் இருக்கலாம். குருதி கசியத் தொடங்கியதும் தாமதமின்றி மருத்துவரின் உதவியை நாடவேண்டும். கருச்சிதைவின் அறிகுறிகள் தொடங்கிய பின்பு கருப்பிணி வீட்டில் அதிகம் நடமாடாது படுக்கையில் ஒய்வாகப் படுத்திருக்கவேண்டும். ஏனைய வற்றை மருத்துவர் கவனித்துக்கொள்வார்;

குறைமாதப் பிரசவம்: ஏழாவது மாதற்குமேல் ஏற்படும் கருச்சிதைவு குறைமாதப் பிரசவம்' என்று வழங்கப்பெறு கின்றது; தாயின் உடலிலுள்ள மேகநோய், நல்ல ஊட்ட முள்ள உணவின்மையால் அவளது உடல் பலவீனமாயி ருத்தல், வைட்டமின் E-யின் குறைவு, குருதிச் சோகை, ஹார்மோன்கள் தாமாக இயங்குதல் போன்றவை இதற்குக் காரணங்கள் ஆகலாம் கருப்பிணியைப் பொறுத்தவரை இது சுகப் பிரசவமாகவே முடிகின்றது. குழந்தையின் வளர்ச்சி நிறைவுபெற்றிராததனுல் குழந்தை எளிதாகவெளி வந்து விடுகின்றது. குழந்தையைக் காப்பாற்றுவதுதான் முக்கியப் பிரச்சினையாகின்றது. பிறக்கும்பொழுது அதன் எடை நாலரை இராத்தலுக்குக் குறையாதிருந்தால் குழந் தையைப் பிழைக்க வைத்து வளர்த்துவிடலாம். எட்டாம் மாதத்தில் பிறக்கும் குழந்தை தொட்டில் ஏருது என்று நினைப்பது தவறு. குழந்தை பிழைப்பதற்கு அது பிறந்த மாதம் முக்கியம் அன்று: பிறக்கும்பொழுதுள்ள எடையே மூக்கியமாகும்.

சிறுநீரில் புரதம்: கருப்பகாலத்தில் சிறுநீரகங்களுக்குக் கோளாறுகள் ஏற்படக்கூடும். கருப்பம் என்று தெரிந்ததும் ஒரு பெண் தன் சிறுநீரைச் சோதித்துக் கொள்ளவேண்டும்: மூன்று வாரங்களுக்கொருமுறை சிறுநீர் சோதனையைச் செய்துகொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாதது: சிறுநீரகங்களில் ஏதாவது கோளாறு நேர்ந்திருப்பின் அவை சரியாகச் செயற்படுவதில்லை. நாடோறும் அகற்றப்பெற

50. Geoplpirgo touré alth—Miscarriage:

இ-13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/199&oldid=597974" இலிருந்து மீள்விக்கப்பட்டது