பக்கம்:இல்லற நெறி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

இல்லற நெறி


1

அன்பு நிறைந்த செந்தில்வேலனுக்கு,

நலன். நலனேயாகுக. இந்த உலகம் ஆண்-பெண்வடிவாக இலங்குகின்றது: முழுமுதற்பொருளும் ஆண் பெண் வடிவாகப் பொலி கின்றது. ஆகலின், பெண்ணும் ஆணும் கூடி வாழும் வாழ்வே வாழ்வாகும்;

மண்ணினல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணினல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலைக் கண்ணினல் லஃதுறுங் கழுமல வளநகர்ப் பெண்ணிகல் லாளொடும் பெருந்தகை இருந்ததே. என்ற ஞானசம்பந்தப் பெருமானின் திருப்பாடலை நினைவு கொண்டு வாழ்க்கையைக் கூர்ந்துநோக்கின் அண்டம் ஆண்பெண்ணுக அமைந்திருப்பதன் உண்மையும் பிண்டமும் அதனையொட்டி அவ்வாறே அமைந்திருப்பதன் தத்துவமும் புலகுைம். இன்றைய உயிரியல்' ஆராய்ச்சியும் இவற்றைத் தெளிவாக்கும்.

திருமணம்: ஒருபாதிபூதி,பெண்ணும் மற்ருெருபாதி யாகிய ஆணும் ஒன்று தயே ஆன்ருேர் திருமணம் என்ற பெயரால் குறித்தின்ர். திருமணம் என்பது வெறும் விளையாட்டு நிகழ்ச்சியன்று; ஒரு பொழுது தோன்றி மறு பொழுது அழியும் சாதாரணச் செயலன்று. அஃது ஆயிரங் காலத்துப் பயிர்”. ஒவ்வொரு பாதியாக வளர்ந்து வரும் இரண்டு உயிர்கள் ஒன்றி முழுத்தன்மை எய்திக் கடனுற்று

1. தேவாரம்-அடங்கன்முறை-3052. 2, 2-uśiñui–Biology:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/24&oldid=1285086" இலிருந்து மீள்விக்கப்பட்டது