பக்கம்:இல்லற நெறி.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பக் கட்டுப்பாடு 鳍4琶

ஒரு தொடிக்கத்தைக் கொடுக்கவும் ஒவ்வொரு பெற்ருேரும் கடமைப்பட்டுள்ளனர்: தன் மனைவியின் உடல் நிலையையும், வலிவையும் பாதுகாக்கு பொறுப்பும் ஒவ்வொரு கணவனுக் கும் உண்டு: ஒரு பெண் இதயநோய், சிறுநீரக நோய், இருமல் நோய், நீரிழிவு நோய் ஆகிய நோய்களால் பாதிக் கப்பெற்றிருந்தாலும், கிலேரியன் அறுவை சிகிச்சை முறை யை இரண்டு தடவை பெற்றிருந்தாலும் மருத்துவ காரண மாகக் கருத்தடை மிகவும் இன்றியமையாதது. அவள் நல்ல உடல் நிலையுடனிருந்தாலும் தன்னுடைய எதிர்கால உடல் நலத்தைப் பாதுகாப்பதற்காக இரண்டு குழந்தைப்பேற் றிற்கு இடையிலுள்ள கால அளவினை எங்ங்ணம் ஏற்ற அளவு அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை அறிதல் வேண்டும்: இன்றைய வாழ்க்கை முறையில் ஒரு பெண் தன் இனப்பெருக்கத் திறன் இருக்கும் அளவுக்குக் குழந்தை களைப் பெற்ற வண்ணமிருந்து தன்னுடைய உடல் நலத் தைப் பாதுகாத்துக் கொள்வதென்பது இயலாததொன்று இந்நிலை தாயின் உடல் நலத்தையும் சேய்களின் உடல் நலத் தையும் பெரிதும் பாதிக்கின்றது. ஒரு குழந்தை பிறந்த பின் னர் குறைந்த அளவு மூன்று மாண்டுகட்குப் பின்னரே கருத் தரித்தல் நன்று. நோய்வாய்ப்பெற்ற பென்களுக்கு இந்த இடைவெளி இன்னும் அதிகமாக இருத்தல் வேண்டும்: மேலும் பெற்ருேர்களில் யாரேனும் ஒருவரிடம் உடல் கோளாருே, உளக்கோளாருே இருக்கும்பொழுது கருத் தடை செய்துகொள்வது நன்று. எனவே, ஒவ்வொரு மன மக்களும் தம்முடைய நலனுக்காகவும் தம்முடைய வழிவழி வருவோரின் நலனுக்காகவும் அறிவியலடிப்படையிலமைந்த கருத்தடை முறைகளை நன்கு தெரிந்திருத்தல் இன்றியமை யாதது என்பது பெறப்படுகின்றது.

நாகரிகத்தின் அருஞ் செயல்: இயற்கை விசைகளைக் கட்டுப்படுத்தித் தக்க முறையில் கையாளுவதனலேயே நாக ரிகத்தின் அருஞ்செயல்கள் அனைத்தும் அமைந்துள்ளன. நீராவியின் விசையைக் கட்டுப்படுத்தி மனிதன் பெரிய பொறிகளை இயக்குகின்றன்; புகைவண்டி, கப்பல் பயணங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/251&oldid=598093" இலிருந்து மீள்விக்கப்பட்டது