பக்கம்:இல்லற நெறி.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

இல்லற நெறி


ஐந்து வயதுகூட நிறையப் பெருத சிறு குழவிகளின் அகால மரணத்தின் எண்ணிக்கை 40 இலட்சம். மூன்று அல்லது அதற்குமேற்பட்ட குழந்தைகளையுடைய தம்பதிகள் அதற்கு மேற்பட்டுக் குழந்தைகளைப் பெருமல் இருக்கத் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பெறின் அரசினரின் குறிக்கோள் நிறைவுபெறும். இதனுல் ஆண்டொன்றுக்கு 150 இலட்ச மாக இருக்கும் பிறப்பு விகிதத்தைச் சுமார் 90 இலட்சத்திற் குக் குறைத்துவிடலாம். குழந்தைகள் சிசுக்களின் அகால மரணத்தையும் 40 இலட்சத்திலிருந்து 24 இலட்சத்திற்கும் குறைவாக (20இலட்சத்திற்கும்கூட) இருக்குமாறு செய்து விடலாம். பிறப்பையும் இறப்பையும் குறைத்து ஓரளவிற் குக் கட்டுப்படுத்திவிட்டால் நம் நாட்டின் மக்கள் தொகை யும் ஒரளவு நிலையாகிவிடும்; அரசினர் மேற்கொண்டுள்ள ஐந்தாண்டுத் திட்டங்களும் வெற்றியுடன் செயற்படும். இதற்கு ஒவ்வொரு தம்பதிகளும் நாட்டின் சேவையில் தம் கடமையை உணர்ந்து பொறுப்புடன் பணியாற்றவேண்டும். இதற். க் குடும்பக் கட்டுப்பாட்டு முறை பெரிதும் துணை செய்யும்.

மேல் காடுகளில் முன்னேற்றம்: இன்று இங்கிலாந்து பிரான்சு, மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, ஒவியானியா போன்ற முன்னேற்றமுள்ள நாடுகளில் சம்பிரதாயக் குடும் கள் குறைவாச வும் திட்டமிட்ட குடும்பங்கள்’ அதிகமாக வும் உள்ளன. இந்தியா, ஆசியா, ஆஃபிரிக்கா, தென் அமெ ரிக்கா போன்ற அதிக முன்னேற்றமடையாத நாடுகளில் திட்டமிட்ட குடும்பங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு: சரியான புள்ளி விவரங்கள் கிடைப்பின் திட்டமிட்ட குடும் பங்கள் நிறைந்த ஒருசமுதாயத்திற்கும், சம்பிரதாயக் குடும் பங்கள் நிறைந்த ஒரு சமுதாயத்திற்கும் இடையேயுள்ள பல குறிப்பிடத்தக்க வேற்றுமைகளைக் கண்டு கொள்ளலாம்.

நம் நாட்டு மக்களைக் காட்டிலும் ஆங்கிலேயர் அதிக வருவாயும் பொருள் வசதியும் உயர்ந்த வாழ்க்கைத் தரமும்

5. 5 ibi RJ5fruả GGibt išsér–Traditional family.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/256&oldid=1285202" இலிருந்து மீள்விக்கப்பட்டது