பக்கம்:இல்லற நெறி.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

இல்லற நெறி


17-நாள் முட்டை பக்குவமடையும். எனவே, மாதவிடாய் தொடங்கும் நாளுக்கும் முட்டை பக்குவப்படும் நாளுக்கும் அடுத்து நிகழும் மாதவிடாய் தொடக்க நாளுக்கும் இடைப்பட்ட நாட்களின் என்னணிக்கை மாறுபடும் என்பதும், ஆனல் முட்டை பக்குவப்படும் நாளுக்கும் அடுத்து நிகழும் மாதவிடாய் தொடக்க நாளுக்கும் இடைப்பட்ட நாட்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மாருத நிலையிலிருக்கும் என்பதும் தெளிவாகின்றன.

மேற்கண்டவாறு எளிதான மாதவிடாய் வட்டத்தைக் கொண்ட பெண்ணிடம் முட்டை பக்குவப்படும் நாட்களே அறுதியிடல் எளிது. ஆனல், இரட்டை மாதவிடாய் வட்டங்களிலும் பல்-மாதவிடாய் வட்டங்களிலும் பெண் களிடம் முட்டை பக்குவப்படும் நாட்களே அறுதியிடல் மிகவும் சிக்கலானது; மும்மடியான மாதவிடாய் வட்டங் களைக் கொண்ட பெண்ணின் மாதவிடாய் நாட்கள் விளக் கப்படத்தில் (படம்-45) காட்டப் பெற்றுள்ளன; இந்தப் பெண் மார்ச்சு முதல் நாள் மாதவிடாய் ஆளுள்; இவளது அடுத்த மாதவிடாய் மார்ச்சு 28-இல் தொடங்கியது. இப் பொழுது அவளது மாதவிடாய் வட்டம் 27 நாட்கள் ஆகும். இதிலிருந்து 15 நாட்களைக் கழித்துப் பார்த்தால் அவளிடம் மார்ச்சு 13-இல் முட்டை பக்குவமாயிற்கு என்று தெரிகின் றது. மூன்ருவது முறை இப்பெண் ஏப்ரல் 29-ல் தூரமாளுள். இந்த வட்டம் 32 நாட்கள் ஆகும். இதிலிருந்து 15 நாட் களைக் கழித்தால், அவளிடம் ஏப்ரல் 14-இல் முட்டை விடு பட்டிருக்க வேண்டும் என்று ஏற்படுகின்றது. நான்காவது துாரம் இவளிடம் மே 29-இல் தொடங்கியது. இந்த வட்டம் 30 நாட்கள் ஆகும். இதிலிருந்து 15 நாட்களைக் கழிக் கவே, அவளிடம் மே 14-இல் முட்டை பக்குவப் பட்டது என்று தெரிகின்றது. இவளிடம் சில சமயம் 27 நாட்கள் வட்டமும், சில சமயம் 30 நாட்கள் வட்டமும், சில சமயம் 32 நாட்கள் வட்டமும் ஏற்படுவதால், இவளது நடைமுறையிலுள்ள வட்டம் எத்தனை நாட் கள் என்பதை அறுதியிடல் முடியாது. இவளது மாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/266&oldid=1285207" இலிருந்து மீள்விக்கப்பட்டது