பக்கம்:இல்லற நெறி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்ப்பொருத்தம் 感、

கின்றனர் மணமகனின் பெற்றேர். கல்வி ஒரளவு பெருகி வரும் இக்காலத்தில் மணமகன் நன்முகக் கல்வி கற்றிருக்க வேண்டும் என்று கருதும் பழக்கம் முகிழ்க்கத் தொடங்கி யிருக்கின்றது. மணமகளின் கல்வியைப்பற்றி யாவரும் அதிகமாக வற்புறுத்துவதில்லை. கல்வி பெருகி மக்கள் உண்மையை உணருங் காலத்தில்தான் அனைத்தும் சீர்படும். ஆல்ை, பணத்தாசை கற்றவரையும் கல்லாதாரையும் ஆட்டிவைக்கும் பேயாகத் தோன்றி வருகின்றது. இந்தப் பேயாட்டத்தை அறிவில்ைதான்-உண்மைக் கல்வியில்ை தான்-மட்டுப்படுத்த வேண்டும். இந்தப் பேயை அடியோடு ஒட்ட எந்த அறிஞராலும் முடியாது. புத்தர்பிரான் எடுத்த முயற்சி எந்த அளவு வெற்றியடைந்தது என்பதை நாம் அறிவோம். பிறவியிலேயே பேதையரும் தோன்றுகின் றனர்; மேதையரும் தோன்றுகின்றனர். சூழ்நிலையும் 9 இந்த இருவகையினரை உண்டாக்குகின்றது. இந்த உண் மையை இன்று உளவியல் காட்டுகின்றது. நன்கு கல்வி கற்ற நீ பணத்தாசை மக்களிடம் அளவுடன் இருக்க வேண் டும் என்பதை வற்புறுத்தவேண்டும்; அதற்குப் பிரசாரமும் செய்ய வேண்டும். மேடைப் பேச்சில்ை இப்பிரசாரம் பயன் தராது. மக்களைத் தனித் தனியாகச் சந்தித்துப் பேச வேண்டும்:

திருமணம் வளர்ந்த கதை : பொருளாதாரக் கூறினை மக்கள் அதிகமாக வற்புறுத்துகின்றனர் என்பது குறித்து நீ வியப்பெய்த வேண்டியதில்லை. குடும்பமும் திருமணமும் வளர்ந்த கதையினை ஆராய்ந்தால் இவ்வுண்மை ஓரளவு புலனுகாமற் போகாது. அண்மைக் காலம் வரையில் உலகி லுள்ள எல்லாச் சமூகங்களிலும் ஆடவனே பொருள் திரட்டு பவன்; பெண்ணே குடும்பம் நடத்துபவள். ஆடவனே 'இல்லான்’ என்ற பொருளில்லாத நிலையிலிருந்து பொரு வீட்டுபவன்; பெண்ணே குடும்பத்தை ஆளும்-வீட்டை ஆளும்- இல்லாள்". பண்டைக் காலத்தில்-ஏன்? இன்றுங்

T 10. go—Environment.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/29&oldid=598179" இலிருந்து மீள்விக்கப்பட்டது