பக்கம்:இல்லற நெறி.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

இல்லற நெறி


காப்பினையும் அளித்தல் வேண்டும். அம்முறை தனியாளின் தேவைகளனைத்தையும் திருப்தி செய்யவேண்டும். எனவே கையாளப்பெறும் முறை எளிதாகவும், எவரும் கையாளக் கூடியதாகவும், அதிகச் செலவின்றியும், அருவருப்பின்றியும் இருத்தல் வேண்டும் என்ருகின்றது. இத்தகைய ஒருமுறை யின் இன்றியமையாமையைப் பற்றி சிக்மண்ட்ஃபிராய்ட் என்ற உளவியலறிஞர் 1898-ஆம்ஆண்டிலேயே தன்னுடைய கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய முறை யொன்றினைக்கண்டறியும் அறிவியலுலகத்திற்கு எண்ணற்ற ஆண்களும் பெண்களும் கடமைப்பட்டிருப்பர் என்று அவர் கூறுகின்ருர்.

அண்மைக்காலம் வரை இத்துறையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பெறவில்லே. சமூகம் இதை விரும்பாத தாலும், சட்ட மூலம் அதிகக் கட்டுப்பாடு இருந்ததாலும் அறிவியலறிஞர்கள் இத்துறையில் கவனம் செலுத்தவில்லை: கடந்த முப்பதாண்டுகளாகத்தான் இத்துறையில் ஆய்வுகள் தடைபெற்றுவருகின்றன. எதிர்காலத்தில் தகுந்த உயிரியல் துறையொன்று கண்டறியப் பெறலாம் என்ற நம்பிக்கை இருக்கத்தான் செய்கின்றது.

அறுவை மருத்துவ முறை: தற்காலத்தில் புணர்ச்சிக்கும் புணரும் திறனுக்கும் யாதொரு தடையுமின்றி அறுவை மருத்துவ முறை மூலம் அல்லது புதிர்க்கதிர்கள்மூலம் ஒரு பெண்ணையோ ஆணையோ நிரந்தரமாக இனப்பெருக்க மின்றிச் செய்துவிடலாம். ஆண்களிடம் விரைகளிலிருந்து விந்தனுக்கள் வெளிப்படும் பாதையிலும்,ப்ெண்களிடம்சூற் பைகளிலிருந்து முட்டையணு வரும்பாதையிலும்செயற்கை முறையில் ஒரு தடையை உண்டாக்குவதே இந்த அறுவை மருத்துவ முறையின் நோக்கமாகும்; ஆணிடம் விந்தேறு குழல் அடைக்கப்பெறுகின்றது. விரைகளில் உற்பத்தியா கும் விந்தணுக்கள் விரைகளிலிருந்து இரு தொமைக்கும் இடையிலுள்ள பகுதிவழியாகச்சென்று பிறகு பின்புறமாகத்

783 slojn(53.gy Gypsy-Vas deferens

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/296&oldid=1285222" இலிருந்து மீள்விக்கப்பட்டது