பக்கம்:இல்லற நெறி.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

இல்லற நெறி


கூறுதல் பொருந்தும். சூதக ஒய்வினை 'வாழ்க்கையின் மாற்றம்' என்று வழங்குகின்றனர். இப்பருவத்தில் ஒரு பெண் தன் இனப்பெருக்கத் திறனை இழக்கின்ருள். அவளு டைய சூற்பைகள் முட்டையை முதிரச் செய்யும் திறனை இமுககின்றன; கருவுறலும் அவளிடம் நின்று போகின்றது. பூப்படையும் காலத்தில் அவளுடைய உயிரி முழுவதும் படிப்படியாகப் பால் முதிர்ச்சிக்கு எங்ங்னம் தயாரா கின்றதோ அங்ங்ணமே சூதக ஒய்வின் இறப்பியல்புகளைக் குறிப்பிடும் மாற்றங்களும் படிப்படியாகவே நடைபெறு கின்றன. இப்பொழுது உடல் நிலைத்திருப்ப மாறு பாட்டின்' அறிகுறிகளும்தொடர்ந்து உண்டாகின்றன. பூப் படையும் பருவத்தில் குற்பைகளின் செயல் மாதவிடாயில் சென்று முடிவதைப் போலவே, வாழ்க்கையின் மாற்றப்” பருவத்திலும் மிகவும் வெளிப்படையாகவுள்ள செயல் மாதவிடாய் நிற்றலில் போய் முடிகின்றது. இந்தத் திருப்ப நிலக்காலம் பெண்ணுக்குப் பெண் அதிகமாக மாறுபடுகின் றது. சிலரிடம் சூதக ஒய்வு திடீரெனத் தோன்றுகின்றது; சிலரிடம் இதுடிப்படியாக நடைபெறுபவர்களிடம் நான்கு வாரங்களுக்கொரு முறை ஒழுங்காக நிகழும் மாதவிடாய் ஒழுங்கின் தீவிரம படிப்படியாகக் குறைந்து கடைசியில் நின்றுவிடுகின்றது; வேறு சிலரிடம் மாதவிடாய் ஒழுக்கின் காலமும் தீவிரமும் சிறிது சிறிதாகக் குறைவதுடன், இரண்டு மாதவிடாய்களுக்கு இடைப்பட்ட காலம் நீண்டு இறுதியில் மாதவிடாய் நின்று சூதக ஒய்வு நடைபெறுகின் றது. இன்னும் சிலரிடம் இம் மாதவிடாய் ஒழுக்கு நீண்ட காலத்தி கோ அல்லது குறுகிய காலத்திற்கோ (9 மாதத்திலிருந்து 12 மாதம்வரை) நிற்பதாகத் தோன்றி, திரும்பவும் ஒழுங்கான கால இடையீட்டு டன் ஏற்பட்டுது இறுதியாக முற்றிலும் நின்று போகின்றது. இத்தகைய பெண்களிடம் இவ்வாறு தோன்றுவது நோயின் நிலை என்றும், இவர்கள் மருத்துவச் சோதனைக்குக் காலந் தாழ்த்

9. autrypešao sustas arī pli-Change of life. 10; உடல்நிலைத் திருப்ப மாறுபாடு-Climacteric.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/308&oldid=1285227" இலிருந்து மீள்விக்கப்பட்டது