பக்கம்:இல்லற நெறி.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

இல்லற நெறி


முற்றிலும் மலடு என்ருே அறுதியிடல் முடியாது. கருத்தரிக் கும் பண்பு இருவரிடமும் குறைவாக இருப்பின், அவர்கட் குக் குழந்தைப்பேறு இல்லாது போகின்றது. இந்த இருவரும் கருத்தரிக்கும் பண்பு அதிகமுள்ள வாழ்க்கைத் துணையை இரண்டாவது தடவையாகத் தேர்ந்தெடுத்துக் கொண் டால், இருபாலாருக்கும் குழந்தைப்பேறு உண்டாகலாம்:

கருத்தரித்தல் கணவன்-மனைவி ஆகிய இருபாலாரையும் பொறுத்தது என்பது அண்மைக்கால ஆராய்ச்சியின் முடி வாகும். பழங்காலத்தில்-ஏன்? இன்றும்கூட-குழந்தைப் பேறில்லாக் குறையைப் பெண்ணுக்கே ஏற்றிக் கூறப்பெற் றது. குழந்தைப்பேறின்மை ஒரு குறையாகக் கருதப்பெற்ற துடன், பெண்ணே அதற்குக் காரணம் என்று குற்றமும் சாட்டப்பெற்று வந்தாள். சில நாடுகளில் மலடு மணமுறி விற்கு ஒரு காரணமாகவும் அமைகின்றது; மக்கட் பேறில் லாப்பெண் ஏளனத்திற்கும் வெறுப்பிற்கும் இலக்காகிவருகின் ருள். அண்மைக் காலத்தில் ஏற்பட்ட ஆராய்ச்சியின் முடிவு இப்போக்கினைச் சிறிது மாற்றியுள்ளது. எனினும், கல்வி யறிவு மக்களிடையே நன்கு ஏற்படாதவரை எந்த முடிவு களும் பரந்த நிலையில் நற்பயன்களை விளைவிக்கா.

தல யாத்தினை : நம் நாட்டில் சில தம்பதிகள் இக் குறையைத் தமது தவக் குறை எனக் கருதித் தல யாத்திரை செய்து இக்குறையை நிவர்த்தி செய்துகொள்ள முயல்கின்ற னர். தமிழ் நாட்டில் குழந்தைப் பேறில்லாத் தம்பதிகள் இராமேச்சுவரம் போய் வருவது இன்றும் பெரு வழக்காக இருந்து வருகின்றது. நம்பிக்கையும் பக்தியும் உள்ள ஒரு கிலருக்கு இத்தகைய தல யாத்திரைகளால் குழந்தைப்பேறு ஏற்பட்டு வருவதால் இப்பழக்கம் அறுபடாமல் வாழையடி வாழையாய் நடைபெற்று வருகின்றது. தசரதன் மிகவும் பக்தியுடன் முறைப்படி புத்திர காமேட்டி’ என்ற யாகத் தைச் செய்ததால் பரந்தாமனே வந்து குழந்தையாகப் பிறந் தான் என்ற காப்பியவரலாறு மக்களிடையே இந்த நம்பிக் கையைத் துண்டா விளக்குபோல் சுடர்விட்டு ஒளிரச்சேய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/312&oldid=1285229" இலிருந்து மீள்விக்கப்பட்டது