பக்கம்:இல்லற நெறி.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330

இல்லற நெறி


பாலூட்டி வளர்க்கவேண்டும் என்ற மனேவியின் இயற்கைத் துடிப்புக்கு அரைத் தத்து முறையினுல் ஒருவித மனநிறைவு ஏற்படுவதற்கு வாய்ப்பு கிடைக்கின்றது. தன் மனைவி கருவுற்றிருக்கும்பொழுது கணவனும் பிறக்கப்போகும் குழந்தையைத் தன்னுடைய குழந்தையாகவே கருது கின்றன். பிறக்கும் குழந்தையும் கணவனுக்கும் மனைவிக் கும் பெரு மகிழ்ச்சியை அளித்துக் குடும்பத்திற்கும் ஒர் ஆதரவினத் தருகின்றது. சில அமெரிக்கக் குடும்பங்களில் சில தம்பதிகள் இம்முறையில்ை இரண்டு அல்லது மூன்று குழவிகளைப்பெற்று மகிழ்ச்சி குறையாது இருக்கின்றதாகச் சொல்லப்பெறுகின்றது. தம்பதிகளும் மருத்துவரும் நன்கு கலந்து யோசித்த பிறகே கொடையாளியின்' வித்துப் பாய் மத்தை எடுக்கத் துணியவேண்டும். இதற்குத் தம்பதிகள் இருவரது அவாவும் இன்றியமையாதிருப்பதுடன் அவர்கள் இருவரும் தனித்தனியே மனப்பூர்வமாக இம்முறைக்குத் தம் விருப்பத்தைத் தெரிவித்தல்வேண்டும். இம்முறையைக் கை ாளும் பொழுது தம்பதிகள் விந்துக் கொடையாளி யார் என்பதையும், அங்ங்ணமே விந்துக் கொடையாளியும் யாருக்கு இஃது அளிக்கப்பெறுகின்றது என்பதையும் அறிந்துகொள்ளாதிருத்தல் பெரிதும் வேண்டற்பாலது. பின்னர் எழக்கூடிய பல்வேறு சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு இஃது அவசியம் மேற்கொள்ளப்பெற வேண்டியதொன்று. தேர்ந்தெடுக்கப்பெறும் கொடையாளி நல்ல குடும்பத்தி லுள்ளவராகவும், நல்ல. உடல் சுகாதாரத்துடனும் இருத் தல் வேண்டும் என்பதை வற்புறுத்திக் கூறவேண்டியதில்லை. மேற்கூறிய முறை ஒரே தடவையில் வெற்றியளிக்கும் என்று சொல்வதற்கில்லை. இது பெண்ணுக்குப் பெண் பெரி தும் மாறுபடும். சில சமயங்களில்-இஃது அரிதாக நடை பெறுவது-ஒரு பெண் ஒரே தடவையில் கருவுறுகின்ருள். ஆனால், பல மாதங்கள் இம்முறையைத் தொடர்ந்து கை யாளுவதகுல்தான் கருப்பம் ஏற்படுகின்றது என்பது நடை முறையில் காணும் உண்மை. சிலரிடம் இம்முறை வெற்றி யளிப்பதில்லை; பெண்களே மலடாக இருந்தால் இம்முறை யால் எங்ங்னர் வெற்றி ஏற்படும்? - . . ."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/336&oldid=1285240" இலிருந்து மீள்விக்கப்பட்டது