பக்கம்:இல்லற நெறி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இல்லற நெறி

زt 3

உள்ளக் கிளர்ச்சி முதிர்ச்சி : உள்ளக் கிளர்ச்சியின் முதிர்ச்சி என்பதுபற்றிவிவரமாகவும் விளக்கமாகவும் பின் னர் உனக்கு எழுதுவேன்; நேரிலும் பேசுவேன்: பொதுவாக நோக்குமிடத்து மனநிலையிலும், மீப்பண்பு முதிர்ந்த நிலை யிலுமுள்ள பலர் மிகச் சங்கடமான சூழ்நிலைகளிலும் மணம் புரிந்துகொண்டு திருப்தியான முறையில் பொருத்தப்பாடுற் றிருப்பதையும், வேறு பலர் தம்முடைய மீப்பண்புகள், மன நிலைகள்,29 முதிர்ச்சியடையாத நிலைபோன்ற காரணங் களால் எந்தவிதமான நல்ல சூழ்நிலைகளிலும் திருமணம் புரிந்து கொண்டு சரியான முறையில் பொருத்தப் பாடடைந்து வாழமுடியாது திண்டாடுவதையும் காணலாம். ஆகவே, நிலையானதும் மகிழ்ச்சியானதுமான உறவு முறை அமைப்பதில் ஒரு தனியாளின் ஆளுமை' பெரும் பங்கு பெறுகின்றது என்பதை நீ அறிவாயாக. ஆனால், கணவனும் மனைவியும் ஒத்து வாழ்வதால் இந்த உறவுமுறை நன்கு அமைதல் கூடும் என்று நீ கருதக்கூடும், அதுதான் இல்லை; அங்ங்னம் அமைய வேண்டிய இன்றியமையாமையும் இல்லை. உள்ளக்கிளர்ச்சிப் பொருத்தம்’ என்பது கணவனும் மனைவி யும் ஒருவரோடொருவர் சேர்ந்து வாழ்வதில் இல்லை; அஃது அவர்களுடைய ஆளுமைகளைப் பொருத்ததாகும். ஆளுமை என்பது உளவியலறிஞர்கள் கண்ட பேருண்மையாகும். ஒரு மனிதனுடைய நடத்தை, வழக்கம், மனப்போக்கு, எண்ணங்கள், நோக்கங்கள், கருத்துக்கள், நம்பிக்கைகள், மனப்பான்மைகள் முதலியவை அனைத்தும் கலந்து நிற்கும் மனப்பாங்கே ஆளுமை எனப்படும். அஃது அவற்றின் வெறுஞ்சேர்க்கை மட்டும் அன்று; அச்சேர்க்கையில் ஒருமைப்பாடும் உண்டு. அண்மையில் யான் சென்னையில் கண்ட இரண்டு தம்பதிகளைப்பற்றிச் சில சொற்கள் கூற

18. உள்ளக் கிளர்ச்சியின் முதிர்ச்சி-Emotional maturity. 19. 15tationL—Temperament; 20. Ingor flá)—Disposition: 21, 56;fiturgit–Individual.; 22, 4e56,old—Personality:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/36&oldid=1285093" இலிருந்து மீள்விக்கப்பட்டது