பக்கம்:இல்லற நெறி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணப்பொருத்தம் 39

ம்ாறு அமைதல் வேண்டும் இருவருடைய உடல்நில்ையும் பிள்ளைப்பேற்றிற்கேற்றவாறு பக்குவப்பட்டிருத்தல் வேண் டும். மணமக்களின் வயதில் கிட்டத்தட்ட நான்கு யாண்டு களாவது வேற்றுமையிருக்க வேண்டும். இதை எண்ணித் தான் பண்டைத் தமிழ் இலக்கணங்களில் மணமகனின் வயது பதினறு என்றும், மணமகளின் வயது பன்னிரண்டு என்றும் வரையறை செய்யப்பெற்றுள்ளது. ‘இவனும் பதின ராட்டைப் பிராயத்தாளுய் இவளும் பன்னீராட்டைப்பிரா யத்தாளாய் என்று பண்டைய அறிஞர்கள் வயதினை வரை யறை செய்துள்ளதை எண்ணுக. இதிலிருந்து நாற்பதுவயது நிரம்பிய நரை மூதாளர் ஒருவருக்குப் பதின்ைகு வயதுள்ள ஒரிளங் கன்னியை இரண்டாந்தாரமாக மணம் புரிவித்தல் மிகக் கொடுமை என்பதை நீ அறிவாய். வேண்டுமானுல் அவர் முப்பது வயதிற்கு மேற்பட்ட ஒரு கைம்பெண்ணே மணந்துகொள்ளலாம். திருமணம் நடந்தவுடன் அஃது ஓராண்டு ஈராண்டுக்குள் மனைவி மரித்தால், பிள்ளைப்பேறு கருதி இன்னெருத்தியை மகன் மணக்கலாம். வயது முதிர்ந்த ஒருவன், மனைவியை இழந்தபின், மனைவிநசையால் இடர்ப்படுவனேல், அவன் தன் வயதிற்கியைந்த ஒருத் தியை -அதாவது கணவனே இழந்த ஒருத்தியை-அவளும் விரும்பின்-மணந்துகொள்ளலாம்; அங்ங்னம் செய்யாது, கிழவன் கன்னியைக் கட்டுவது கூடாது. இருவர் எவ்வயதில் எந்நிலையில் மணஞ் செய்துகொள்ளினும், வயது வேற்றுமை நான்கு அல்லது ஐந்துக்குமேல் இருத்தல் கூடாதென்பது கவனிக்கத்தக்கது,” என்ற திரு. வி. க. அவர்களின் ! அறிவுரையைச் சிந்திப்பாயாக.

இந்நிலையில் அவர்களுடைய உடல்நிலைகளும் உளக் கவர்ச்சிகளும் ஒத்துப் போவதற்கு வாய்ப்புண்டு; அது கிடக்க.

17. பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை

(எட்டாம் பதிப்பு) - பக்கம்: 233-34.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/35&oldid=598311" இலிருந்து மீள்விக்கப்பட்டது