பக்கம்:இல்லற நெறி.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணக்கலை 855

வாழ்க்கை திருப்தியாக இராவிடினும், திருமணம் வெற்றி யளிக்காது. இத்துறையில் மேடுைகளில் செய்யப்பெற்ற ஆராய்ச்சிகளாலும், நம் நாட்டில் நாம் அநுபவத்தில் காணும் உன்மைகளாலும் பாலுறவுக்கூறு பெரும் பங்கு பெறுகின்றது என்பதையறியலாம். இந்த உறவில் இனக்க மின்மையோ, அல்லது மனநிறைவின்மைகோ, இருப்பின் அது மணமுறிவில் கொண்டு செலுத்துவதையும் காண லாம்.

திருமணம் தெய்வீக உறவு: பண்டிைக் காலத்தில் காத லும் இணைவிழைச்சும் தவருனவைகளாகக் கருதப்கிபற வில்லை. காதல் ஒரு கலையாகவே வளர்க்கப்பெற்றிருப்ப தைத் தொல்காப்பியம் போன்ற இலக்கணத்திலும் காண லாம். சங்க இலக்கியங்கள் காதலைப் போற்றி வளர்க்கும் விளைநிலமாக இருந்து வருகின்றன. நாயன்மார்களும் ஆழ் வார்களும் காதல் உணர்ச்சியை நாயக-நாயகி பாவ மாகக்கொண்டு இறைவனே அடிையும் வழியாகக் கண்டுள்ள னர். சூடிக்கொடுத்த சுடரிக்கொடியின் திருப்பாவை யும் வாதவூரடிகளின் "திருவெம்பாவையும் இதற்கு எடுத்துக் காட்டுக்களாகும். ஆனல், பிற்காலத்தில் ஒருசில அறியாதார் பெண்களே இழித்துப் பேசியும், இணைவிழைச்சினைத் தவறு என்று கூறியும் பெருந்தவறுகளை இழைத்துவிட்டனர். 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்து வோம்’ என்று புதுமைக்கவி பாரதியாரும், மங்கையராகப் பிறப்பதற்கு, மாதவம் செய்திட வேண்டுமம்மா' என்று கவிமணியும் பாடிப் பண்டைய பெருமையை மீண்டும் நிலே நாம்டமுயன்றுள்ளனர். திரு. வி. க. அவர்கள் எழுதிய :பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை' என்ற நூல் இத்துறையில் செய்துள்ள பணி மிகப் பெரியது. சமயம் நேரிடுங்கால் அதனைப் படித்தும் பயன் பெறுக. திருமணம்’ என்பது ஒரு 'தெய்வீக உறவு' என்பதையும், இந்த ஏற்பாம். டில் இம்மைக்குவேண்டிய நலன்களனைத்தையும், மறுமைக்கு 6. பாரதியார்-கவிதைகள் (86-விடுதலை) איי 7. கவிமணி-மலரும் மாலையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/361&oldid=598337" இலிருந்து மீள்விக்கப்பட்டது