பக்கம்:இல்லற நெறி.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356

இல்லற நெறி


வேண்டிய வழியமைப்புகளனைத்தையும் இணைத்துவைத்த பண்டையோரின் ஆழ்ந்த அறிவினை எண்ணி எண்ணி நாம் மகிழவேண்டும்.

மேகுட்டாரின் நூல்கள்: திருமணத்தைப்பற்றியும் பாலுறவுபற்றியும் ஹேவ்லக் எல்லிஸ்: மார்க்கரெட் சாங்கர் மேரி ஸ்டோப்ஸ் , டிக்கின் சன்: , கின்சே! போன்றவர்கள் அறிவியல் அடிப்படையில் எழுதியுள்ள நூல்கள் நம்மிடம் ஒருவித புதிய மனப்பான்மையை உண்டாக்கிவருகின்றன. இந்நூல்களைப் படித்த ஒரு சிலர் அவற்றின் உன்மைக் கருதி துகளே யறியாது, நம்முடைய பண்டைப் பெருமையையும் பன்பாட்டையும் மதியாது, கோணலான அறிவுபெற்று தத் தமக்குத் தோன்றியவாறு பிதற்றியும் எழுதியும் வருகின்ற னர். இன்று பெண்ணின் பெருமை போற்றப்பெறுகின்றது. இக்காலத்தில் தோன்றும் இலக்கியங்களிலும் கவிதைகளி லும் இக்கருத்து நிழலிடுகின்றது: பழங்காலத்தில் பெரும் பாலும் பெற்ருேர்களே மணமகனைத் தேடியறியும் ஏற்பாடு மாறி, இன்று அவர்கள் தம் பெண்ணையும் தாம் ஏற்பாடு செய்யும் மணமகன் அவளுக்குப்பிடித்துள்ளவன என்று வின வுகின்றனர்! ஒருசில பெண்கள் தாமாகவே துணைவனைத் தேடிக்கொள்கின்றனர். மக்களாட்சிமுறையும்கல்விப் பெருக் கமும் மக்களின் மனப்போக்கையே மாற்றிவருகின்றன. தவிரவும் சமூக, அரசியல், பண்பாட்டுத்துறைகளில் விரை வாக ஏற்பட்டு வரும் மாற்றங்களும், இவற்றின் விளைவாக உண்டாகும் புதிய சமூக மதிப்பீடுகளும் திருமணத்தைப்பற் றியும் பாலுறவுபற்றியும் உள்ள பழங்கருத்துகளைப் புதிய கோணத்தில் நோக்கும் மனப்பான்மையை ஏற்படுத்தி வரு கின்றன.

8. Gopālavé Grébolafi)—Havelock Ellis

9. lofrířsta@grl - Firstsử–Marrgaret Sanger 10. Guofi sħdGi-trůsid–Marie Stopes. II. 19.4&sirénér—Dickinson 14. SDé8 Gs“–Kinse

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/362&oldid=1285252" இலிருந்து மீள்விக்கப்பட்டது