பக்கம்:இல்லற நெறி.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணக்கல்ை 5 y

நம் காட்டு நூல்கள்: இவ்விடத்தில் இன்னெரு செய்தி யும் நோக்கத் தக்கது. பழங்காலத்தில் எல்லா நாடுகளிலே யும் மூத்தோர்கள் பாலுறவுபற்றிய யுக்தி முறைகளை8 இளைஞர்கட்கு உறைத்ததாக அறிகின்ருேம். பூப்பு நிகழ்ச்சி யைக் கொண்டாடும் விழாவில் இதுவும் ஒரு பகுதியாக அமைந்திருந்தது. பாமரர்களிடையே இத்தகைய பழக்கம் நடைபெற்று வந்ததைப் போலவே, கற்றவர்கட்கென நூல்கள் எழுதப்பெற்று அவையும் பெரு வழக்கிலிருந்தன என்பதையும் அறிகின்ருேம் கொக்கோக சாத்திரம்", வாத்ஸ்யாயனருடைய காமசூத்திரம் போன்ற நூல்கள் கற்ருேர்க்குக் காமக் கலையை நன்கு உணர்த்துவதற்கென்றே எழுந்த நூல்களாகும். இன்று இத்தகைய நூல்களின் இன்றியமையாமை நன்கு உணரப்பெற்று வருகின்றது. இன்று அறிவியலடிப்படையில் நூல்கள் தோன்றி வருகின் றன. கலவித்துறையில் பல நூல்கள் கயவர்களாலும் எழுதப் பெற்றுள்ளன; எழுதப்பட்டும் வருகின்றன. அவற்றைக் கையாலும் தொடுதல் ஆகாது. நன்மக்களால் எழுதப் பெற்ற நூல்களே வாழ்விற்குத் துணை செய்யும். அவற்றை மட்டிலும் தேர்ந்தெடுத்துப் படிப்பாயாக.

பாற்கல்வியின் அவசியம் இயல்பூக்க அடிப்படையில் அமைந்த இந்த உணர்ச்சிக்கு இத்தகைய ஆர்ப்பாட்டமான பாற்கல்வி இன்றியமையாததா என்று நீ வினவலாம். நீ வினவுவது சரியே. மானிட வாழ்க்கை ஏனைய பிராணி களின் வாழ்க்கையைப்போல் இயல்பூக்கங்களின் அடிப்படை யில் மட்டிலும் அமையவில்லை. மனிதன் தன்னுடைய அது பவத்தினல் மட்டிலும் வாழவில்லை; தன்னுடைய மூதாதை யரின் அநுபவமும் அவனது வாழ்க்கைக்குத் துணையாக அமை கின்றது. இங்ங்ணம் மூதாதையரின் அநுபவத்தைப் பெறும் முறையே கல்வி என்பது. கல்வியைப் பெறுவதற்கென்றே மனிதனுடைய குழவிப் பருவமும் நீண்டு கிடக்கின்றது. ஏனைய பிராணிகளின் குழவிப் பருவம் இங்ங்ணம் நீண்டிருக்க

13. புக்தி முறைகள்-T ns

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/363&oldid=598341" இலிருந்து மீள்விக்கப்பட்டது