பக்கம்:இல்லற நெறி.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390

இல்லற நெறி


ஆணிடம் நேரிடும் மாற்றங்கள்: இந்த உணர்ச்சி ஏற் படுங்கால் ஆணிடம் நேரிடும் மாற்றங்களை விளக்குவேன். உணர்ச்சி ஏற்படுங்கால் ஆண் குறியினின்றும் விந்துப் பாய்மம் வெளிப்படுகின்றது. விந்தேறு குழல், விந்துப் பைகள், புராஸ்டேட் சுரப்பி ஆகியவை மிக வன்மையாகச் சுருங்கித் தம்மிடமுள்ள பொருள்களைச் சிறுநீர்த் தாரையின் வழியாக வெளியேற்றுகின்றன. இக்கால்வாயில் தான் பல் வேறு சுரப்பு நீர்களும் ஒன்று சேர்ந்து விந்துப் பாய்மமா கின்றன. உணர்ச்சியின் பொழுது இந்தப் பாய்மம் ஆண் குறியின் வழியாக எண்ணற்ற துளிகளாக வெளிப்படு கின்றது. தசைகள் விரிந்து சுருங்கும் எண்ணிக்கைகளும் அவற்றின் உறைப்பும் மனிதருக்கு மனிதர் வேறுபடு கின்றன: ஒருவரிடமே பல்வேறு சமயங்களில் பல்வேறு வித மாக உள்ளன. சாதாரணமாக சராசரியாகப் பத்து முதல் இருபது தடவைகள் வரை சுருங்குகின்றன. இவ்வாறு சுருங்குவதால் வெளிப்படும் வித்துப் பாய்மமும் ஒரு தேக் கரண்டி அளவு உள்ளது:

உச்சநிலை உணர்ச்சி ஏற்படுங்கால் ஆணின் உடலில் ஏற் படும் மாறுபாடுகளை விளக்குவேன் ஆண் குறி விறைத்தலில் ஏற்படும் மாற்றங்களை முன்னரே விளக்கினேன் அல்லவா? அவற்றை ஈண்டு நினைவு கூர்வாயாக. காதலி தொடு வதனுல் (எ-டு அணைதல், முத்தமிடல்) தூண்டப்பெறும் கிளர்ச்சிகள் தோவின் முடிவு நரம்புகளினுல் ஒரு சில நரம்புச் சுவடுகள் மூலம் மூளைக்கு அனுப்பப்பெறுகின்றன; மூளை அவற்றை மகிழ்ச்சிதரும் உணர்வுகளாக உணர்கின்றன. (படம் 81) இந்த உணர்வுகளின் மறிவினர்களின் காரண மாக மூலையில் காதல் பிம்பங்கள்?3 எழுகின்றன: இதனால் சில தசையடுக்குகள் அல்லது தசைத் தொகுதிகள் செயற்

71. இந்நூல்-பக்கம் (93-98), 72. In sola?&w—Reflex. 78, &mgá to buiñigo—Erotic images,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/396&oldid=1285266" இலிருந்து மீள்விக்கப்பட்டது